திருப்பூர்:திருப்பூரில், பின்னலாடைகளுக்கான அட்டைபெட்டி உற்பத்தி, 30 சதவீதம் சரிவடைந்துள்ளது.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் அட்டைபெட்டி உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் இயங்குகின்றன. இந்நிறுவனங்கள், சத்தியமங்கலம், முத்துார் பகுதி ஆலைகளிலிருந்து கிராப்ட் காகிதம் வாங்கி, பின்னலாடை ரகங்களை அனுப்பி, அனைத்து வகை அட்டைபெட்டிகளை தயாரிக்கின்றன.
இருபது ஆயிரம் ரூபாயாக இருந்த கிராப்ட் காகிதம் விலை, 38 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது; காகிதம் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மூலப்பொருளான காகிதம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து, கடந்த மாதம், இரண்டு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டமும் நடத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது, ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, அட்டைபெட்டி நிறுவனங்களுக்கு ஆர்டர் வரத்து குறைந்துள்ளது; அதனால், நாளொன்றுக்கு 30 சதவீதம் வரை, அட்டைபெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ராமசாமி கூறியதாவது:நுால் விலை உயர்ந்து, ஆடை உற்பத்தி பாதிப்பால், பின்னலாடை நிறுவனங்களின் அட்டைபெட்டி தேவை குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, அட்டைபெட்டி உற்பத்தியில், 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.தினமும், இரண்டு டன் அட்டைபெட்டி உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில், தற்போது ஒன்று முதல் ஒன்றரை டன் அளவிலேயே உற்பத்தி நடக்கிறது.நிறுவனங்களின் கிராப்ட் காகிதம் தேவையும் குறைந்துள்ளது. கிராப்ட் காகிதம் தட்டுப்பாடு நீடித்தாலும்கூட, அட்டைபெட்டி உற்பத்தி குறைந்துள்ளதால், தட்டுப்பாடுகளை ஓரளவு சமாளிக்க முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE