சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் வங்கி மேலாளர் குண்டர் சட்டத்தில் கைது: ரூ.3 கோடி மோசடி புகார் எதிரொலி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:மூன்று கோடி ரூபாய் மோசடி புகாரில், முன்னாள் வங்கி மேலாளர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.திருப்பூர், காந்தி நகர், இ.பி., காலனியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 33. தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்தவர். வாகன ஏஜென்சி நடத்துவதாகவும், தொழிலை விரிவுபடுத்துவதாகவும் கூறி, திருப்பூர் ராயபுரம் விரிவு எஸ்.பி., காலனியை சேர்ந்த சூர்யபிரகாசிடம் 25 லட்சத்து, 94

திருப்பூர்:மூன்று கோடி ரூபாய் மோசடி புகாரில், முன்னாள் வங்கி மேலாளர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.திருப்பூர், காந்தி நகர், இ.பி., காலனியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 33. தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்தவர். வாகன ஏஜென்சி நடத்துவதாகவும், தொழிலை விரிவுபடுத்துவதாகவும் கூறி, திருப்பூர் ராயபுரம் விரிவு எஸ்.பி., காலனியை சேர்ந்த சூர்யபிரகாசிடம் 25 லட்சத்து, 94 ஆயிரத்து, 500 ரூபாய்; மங்கலம் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணகாந்த் சர்மா என்பவரிடம், 94 லட்சத்து, 84 ஆயிரத்து, 300 ரூபாய் என, பல்வேறு நபர்களிடம் மொத்தம் 3 கோடி ரூபாய் வரை பெற்று, திருப்பி வழங்காமல், மோசடி செய்துள்ளார்.புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், கோகுலகிருஷ்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதன் நகல், கோகுலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X