பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகள் செல்ல 891 வாகனங்கள் தயார்!

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஓட்டுச்சாவடி மையத்துக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாளை (5 ம் தேதி) அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு வேன், மண்டல அலுவலர்களுக்கு கார், 'கொரோனா கிட்' கொண்டு செல்ல சரக்கு ஆட்டோ என ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்துக்கு மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 1,110

திருப்பூர்:ஓட்டுச்சாவடி மையத்துக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாளை (5 ம் தேதி) அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு வேன், மண்டல அலுவலர்களுக்கு கார், 'கொரோனா கிட்' கொண்டு செல்ல சரக்கு ஆட்டோ என ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்துக்கு மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 1,110 ஓட்டுச்சாவடி மையம், 3,343 ஓட்டுச்சாவடிகள் உள்ளது.திருப்பூர் வடக்குக்கு, 40, தெற்கு, 33, மடத்துக்குளம், 34, காங்கயம், 38, தாராபுரம், 40, உடுமலை, 37, பல்லடம், 39, அவிநாசி, 36 என எட்டு தொகுதியில், 297 மண்டலங்களை தேர்தல் அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா, மூன்று வாகனம் வீதம், 891 வாகனங்கள் இயங்க உள்ளது.ஏப்., 5ம் தேதி மதியம், பயணத்தை துவங்கும் வாகனங்கள், தேர்தல் நாளான, 6 ம் தேதி இரவு 'ஸ்டாரங்ரூமுக்கு' ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்கும் வரை தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். இவ்வாகனங்களின் டிரைவர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X