பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார்: 'டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், கடைகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:தேர்தலையொட்டி 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள் மூடப்பட்டால், ஒரு நாள் கடை மூடப்பட்டாலே 75 சதவீதம் அளவுக்கு,

கடலுார்: 'டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், கடைகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:தேர்தலையொட்டி 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள் மூடப்பட்டால், ஒரு நாள் கடை மூடப்பட்டாலே 75 சதவீதம் அளவுக்கு, முன்னதாக மது பாட்டில்கள் விற்பனையாகும்.எனவே, 4 நாட்கள் மூடப்படுவதால் ஒட்டு மொத்தமாக மதுவாங்க மது பிரியர்கள் குவிவர். ஊழியர்கள் மொத்தமாக தர மறுத்தால் ஊழியர்களிடம் பிரச்னை ஏற்படும்.தேர்தலையொட்டி, மதுபானம் அதிகளவில் விற்கக்கூடாது என்றும், முதல் நாள் விற்பனை செய்ததை விட மறுநாள் 30 சதவீதத்திற்கு அதிகமாக விற்கக் கூடாது என்றும், அரசு உத்தரவிட்டுள்ளது.இதையெல்லாம் மீறி மதுபானம் வாங்கியே ஆக வேண்டும் என பலர் கடைகளுக்கு வருகின்றனர்.அதனால் அவர்களுக்கு விற்க வேண்டிய நிலையில் பணியாளர்கள் இருக்கின்றனர்.மேலும் பல நேரங்களில் பணியாளர்கள் ரவுடிகளால் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தற்போது விற்பனை செய்யப்படும் போது மட்டும் அல்லாமல், மூடியிருக்கும் கடைகளில் உள்ள பொருட்களையும் பாதுகாக்க வேண்டும்.எனவே தேர்தல் ஆணையர்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மூடப்பட்டிருக்கும் நாட்களிலும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X