விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயன் மனைவி குணசுந்தரி, நகர வார்டுகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்தார்.பெரியார் நகர் தெற்கு, வடக்கு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கினார். அப்போது, எனது கணவர் வெற்றி பெற்றதும், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்றிக் காட்டுவார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்துள்ளதால், தனி மாவட்டமாகும். கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் மாணவிகள் அதிகம் படிப்பதால், அரசு மகளிர் கல்லுாரி துவங்கப்படும்.கிராமப்புற மாணவிகள் நலன் கருதி அரசு கல்வியியல் கல்லுாரி, செவிலியர் பயிற்சி கல்லுாரி, குடும்பப் பெண்களுக்கு இலவச கைத்தொழில் பயிற்சி மையம் துவங்கப்படும். எனது கணவருடன் உறுதுணையாக இருந்து, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்' என்றார்.பா.ம.க., மாநில மகளிரணி செயலாளர் சிலம்புச்செல்வி, அமைப்பு செயலாளர் ராஜ், முன்னாள் நகர தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் மணிகண்டன், நகர தலைவர் ஏழுமலை, மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வமணிகண்டன், பொருளாளர் பிரியா, நகர பொருளாளர் தில்லை, மற்றும் அ.தி.மு.க., வேங்கடவேணு, ரஞ்சிதம் ராஜேந்திரன், சாமுவேல் கென்னடி, மகளிரணி ரம்யா, புஷ்பா வேங்கடவேணு உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE