விருத்தாசலம்: 'பத்து நிமிடம் மைக் பிடித்து பேச முடியுமா என கேட்ட நீங்கள், எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் என்ன செய்தார் என்பதை விவாதிக்க முன்வர வேண்டும்' என பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயன் பேசினார்.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயன், பாலக்கரையில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், 'என்னை, பத்து நிமிடம் மைக் பிடித்து தொகுதி மக்களுக்காக பேச முடியுமா என பிரேமலதா சவால் விட்டுள்ளார். விருத்தாசலம் மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் அனைத்து ஒன்றியங்கள், ஊராட்சிகள், குக்கிராமங்களுக்கும் சென்றவன் நான். உங்களால், விருத்தாசலம் தொகுதியில் எத்தனை கிராமங்கள் உள்ளன, அவர்களின் தேவைகள் என்ன என்று கூற முடியுமா.2006ல் எம்.எல்.ஏ.,வான உங்கள் கணவர் விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்பதை விவாதம் செய்ய முன் வரவேண்டும். இந்த தொகுதியில் 10 ஆண்டுகள் தே.மு.தி.க.,வினர் எம்.எல்.ஏ.,வாக இருந்தும், ஒரு வேலை வாய்ப்பு முகாம் கூட நடத்தவில்லை. நீங்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவோம் என கூறுவது ஏமாற்றும் வேலை' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE