வடலுார்: தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் என்னால் நேரில் வந்து ஓட்டு சேகரிக்க முடியாத நிலையில் உள்ளேன்.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் இணைந்து அவர்களுக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று ஓட்டு சேகரித்து நமது மாவட்டத்தில் தி.மு.க., தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நமது மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதன்மையாக இருந்துள்ளேன். தற்போது, தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.நமது மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இணைந்து ஒற்றுமையுடனும் பணியாற்ற கேட்டுக் கொள்கிறேன்.இன்று 4ம் தேதி காலை அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து வெற்றிக்கு உழைத்திட வேண்டும்.தேர்தல் பணியை கவனமுடனும், பொறுப்புடனும் செய்தால்தான் இந்த கடினமான சூழ்நிலையில் எனது பணிக்கும், உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாக இருக்கும்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் மாவட்டத்தில் சுறுசுறுப்பபாக தேர்தல் பணியாற்ற கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE