முறையான குடிநீர் விநியோகம் இல்லை தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முறையான குடிநீர் விநியோகம் இல்லை தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு

Added : ஏப் 04, 2021
Share
விருத்தாசலம்: குடிநீர் கேட்டு விருத்தாசலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் காலனி பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் இல்லை.ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால்,

விருத்தாசலம்: குடிநீர் கேட்டு விருத்தாசலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் காலனி பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் இல்லை.ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப் கலெக்டர் பிரவீன்குமாரிடம் முறையிட்டனர். தேர்தல் முடிந்த பின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.இந்த பதிலால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் சப் கலெக்டர் அலுவலகம் முன், காலை 11:30 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வாக்காளர் அட்டையுடன் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கண்டன கோஷம் எழுப்பினர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், 12:00 மணியளவில் சப் கலெக்டர் அலுவலகம் முன், விருத்தாசலம் - கடலுார் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.தகலறிந்து வந்த டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர்கள் விஜயரங்கன், விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையேற்று பகல் 12:30 மணிக்கு மறியலை கைவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X