கடலுார்: தேர்தல் தொடர்பான பொதுமக்களின் புகாரை, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மற்றும் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் சைலன் சமாதர், அபய்குப்தா, ஆனந்த் பிரகாஷ், அஷிஷ் சிங், காவல் பார்வையாளர் பன்வர்லால் மீனா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தேர்தல் தொடர்பான பொதுமக்களின் புகாரை கலெக்டர் அலுவலகம் மற்றும் வருமான வரித்துறை அலுவலங்களில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளை 18004253168 / 04142 - 220277, 220299, 220288, 1950 ஆகிய எண்களிலும், வருமான வரித்துறை 96773 89889 வருமான வரித்துறை வாட்ஸ் ஆப்பில் எண்.9445394453ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.மேலும், 'சிவிஜில்' ஆப்பை மொபைல போனில் டவுன்லோடு செய்து தேர்தல் தொடர்பான புகார், புகைப்படங்களை அனுப்பலாம். புகார் தெரிவிக்கும் பொதுமக்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE