கடலுார் தொகுதி வளர்ச்சியடைய தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்யுங்கள்: லீமா அய்யப்பன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் தொகுதி வளர்ச்சியடைய தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்யுங்கள்: லீமா அய்யப்பன்

Added : ஏப் 04, 2021
Share
கடலுார்: கடலுார் தொகுதி வளர்ச்சியடைய தி.மு.க., வேட்பாளர் அய்யப்பனை ஆதரிக்க வேண்டுமென அவரது மனைவி லீமா அய்யப்பன் பேசினார்.கடலுார் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கு ஆதரவாக அவரது மனைவி லீமா அய்யப்பன் துறைமுகம் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் பிரசாரம் செய்தார்.அவருக்கு செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவிலில்

கடலுார்: கடலுார் தொகுதி வளர்ச்சியடைய தி.மு.க., வேட்பாளர் அய்யப்பனை ஆதரிக்க வேண்டுமென அவரது மனைவி லீமா அய்யப்பன் பேசினார்.கடலுார் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கு ஆதரவாக அவரது மனைவி லீமா அய்யப்பன் துறைமுகம் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் பிரசாரம் செய்தார்.அவருக்கு செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவிலில் மேல் மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் செவ்வாடை தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.அப்போது அவர் பேசுகையில், 'இயற்கை பேரிடர் காலங்களில் கடலுார் பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட போது எனது கணவர் அய்யப்பன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 35 ஆண்டுகள் அரசியல் மூலம் மக்களுக்காக உழைத்து வருகிறார்.அய்யப்பனை வெற்றி பெறச் செய்தால் தொகுதி வளர்ச்சியடைய பாடுபடுவார்' என்றார்.அரிமா சங்கத் தலைவர் தினகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகி சரத் தினகரன், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், தொ.மு.ச., பிரசார செயலாளர் முருகன், சுந்தர், மகளிரணி எலிசா, வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X