சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடலுார் அருகே ரூ.11.38 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வடலுார்: கடலுார் அருகே பறக்கும் படையினரை பார்த்தவுடன் கீழே போட்டு விட்டுச் சென்ற 11.38 லட்சம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.தேர்தலில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிதம்பரம் தனி தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும்

வடலுார்: கடலுார் அருகே பறக்கும் படையினரை பார்த்தவுடன் கீழே போட்டு விட்டுச் சென்ற 11.38 லட்சம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.தேர்தலில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிதம்பரம் தனி தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எஸ்.புதுார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் வாழைத்தோட்டம் அருகே நின்றிருந்த சிலர், பறக்கும் படை அதிகாரிகள் சென்ற வாகனத்தைப் பார்த்ததும், அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை செய்தபோது, பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டு கிடந்த பணக் கட்டுகளை எடுத்து எண்ணிப் பார்த்தனர். அதில், 11 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.உடன் பணத்தை, குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.மேலும், பணத்தை போட்டு விட்டுச் சென்றவர்கள் யார். எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X