பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார்: நுாறு சதவீதம் ஓட்டளிப்பது குறித்து வரையப்பட்ட பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியத்தை கலெக்டர் பார்வையிட்டார்.கடலுார் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வரும் 6ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. நுாறு சதவீதம் வாக்காளர்கள் ஓட்டளிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலுார் டவுன் ஹால் எதிரே, பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனை கலெக்டர்

கடலுார்: நுாறு சதவீதம் ஓட்டளிப்பது குறித்து வரையப்பட்ட பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியத்தை கலெக்டர் பார்வையிட்டார்.கடலுார் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வரும் 6ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. நுாறு சதவீதம் வாக்காளர்கள் ஓட்டளிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலுார் டவுன் ஹால் எதிரே, பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் சந்திரசேகர சகாமுரிபார்வையிட்டார்.தொடர்ந்து கலெக்டர் தலைமையில், மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நமது மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம். தேர்தலில் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல், எந்த ஒரு துாண்டுதலின்றியும் ஓட்டளிப்போம்' என உறுதி மொழிஏற்கப்பட்டது.தொடர்ந்து 100 சதவீதம் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., அருண்சத்யா, திட்ட இயக்குனர் மகேந்திரன், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு ரூபவ், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X