கடலுார்: ஐ.டி., பெண் ஊழியரை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், சாவடியைச் சேர்ந்தவர் அங்கமுத்து மகள் சொர்ணமுகி, 22; சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 31ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.தனது மகளை சென்னையில் பணிபுரியும் புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுாரைச் சேர்ந்த மகேந்திரன் கடத்திச் சென்றதாக சொர்ணமுகி தாய் மகாலட்சுமி, 46; கொடுத்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE