பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் தொடர் விடுமுறை எதிரொலி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார்: தேர்தலையொட்டி, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று கடலுாரில் ஏராளமான குடிமகன்கள் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் மூலம் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் வரை மது பாட்டில் விற்பனை செய்து வருகிறது. தற்போது, சட்டசபை தேர்தல் என்பதால் மது விற்பனை அமோகமாக

கடலுார்: தேர்தலையொட்டி, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று கடலுாரில் ஏராளமான குடிமகன்கள் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் மூலம் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் வரை மது பாட்டில் விற்பனை செய்து வருகிறது. தற்போது, சட்டசபை தேர்தல் என்பதால் மது விற்பனை அமோகமாக நடக்கிறது.இதற்கிடையே ஓட்டுப் பதிவு வரும் 6ம் தேதி நடைபெறுவதையொட்டி, இன்று 4ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை 3 நாட்கள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்களில் பார்கள், கிளப், ஓட்டல்களில் மது பாட்டில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில், கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல், கடலுாரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன், நேற்று காலை முதல் குடிமகன்கள் குவிந்தனர். மதியம் 12:00 மணிக்கு கடை திறந்ததும், முண்டியடித்து மது பாட்டில்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.அரசியல் கட்சியினரும் தங்களுக்கு வேண்டியவர்களை கடைகளுக்கு அனுப்பி, சில்லரையாக வாங்குவதுபோல், மொத்தமாக கொள்முதல் செய்தனர். சிலர் நான்கு, ஐந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் மது பாட்டில் விற்பனை களைகட்டியது. மாவட்டம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இதே நிலை காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X