பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு ஓட்டுச்சாவடிக்கு, இரண்டு மாணவர்: வாக்காளர் உடல் வெப்ப நிலை பரிசோதிப்பர்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா தொற்று பரவல் காரணமாக, கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பயன்படுத்த மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.இவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், கைகளுக்கு சானிடைசர் தெளித்தல் ஆகிய
 ஒரு ஓட்டுச்சாவடிக்கு, இரண்டு மாணவர்: வாக்காளர் உடல் வெப்ப நிலை பரிசோதிப்பர்

திருப்பூர்:கொரோனா தொற்று பரவல் காரணமாக, கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பயன்படுத்த மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.இவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், கைகளுக்கு சானிடைசர் தெளித்தல் ஆகிய பணிகள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அதற்கான செயல்முறை விளக்கங்கள் நேற்று வழங்கப்பட்டது.
மாநகர சுகாதாரத்துறை அதிகாரி பிரதீப் பேசியதாவது:மாணவர்களாகிய நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபவது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. கொரோனா தொற்று காலத்தில் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் பணிபுரிய வேண்டும். வாக்காளர்களிடம் கனிவாக பேச வேண்டும்.சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
தேர்தல் பணி அங்கீகரிக்கப்பட்ட பணியாகும். எனவே, அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். உறவினர், நண்பர்கள் என்ற ஓட்டளிக்க வருவோரிடம் பேசிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். தேர்தல் நாளன்று, அதிகாலை, 5:30 மணிக்கே ஓட்டுச்சாவடிக்கு வர வேண்டும். ஓட்டுப்பதிவு முடியும் வரை பணியாற்றினால் போதும்.இவ்வாறு அவர் பேசினார்.சுகாதார அலுவலர்கள், முருகன், பிச்சை, ராஜேந்திரன் மற்றும் சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., (அலகு-2) உட்பட பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X