பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு கூட்டமைப்பு அ.தி.மு.க., அணிக்கு ஆதரவு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
அவிநாசி:அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், மூத்த ஒருங்கிணைப்பாளர் அம்பலவாணன், தலைமையில் நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு, 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சபாநாயகர் தனபால், தலைமையில், முதல்வர் பழனிசாமி, அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை, முதல்வர், சிறப்பு திட்டமாக அறிவித்து,

அவிநாசி:அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், மூத்த ஒருங்கிணைப்பாளர் அம்பலவாணன், தலைமையில் நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு, 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சபாநாயகர் தனபால், தலைமையில், முதல்வர் பழனிசாமி, அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தை, முதல்வர், சிறப்பு திட்டமாக அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். இப்பணி தொடர்பாக, மாநில முதல்வர், பொதுப்பணித்துறை அதிகாரிகளை, மாதம் இருமுறை நேரில் அழைத்து, திட்டத்தின் செயல்பாடுகளில் உள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கி வருகிறார்.கடந்த, 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பது என, கூட்டமைப்பு தீர்மானிக்கிறது.
இத்திட்டத்தை உள்ளடக்கிய, 9 சட்டமன்ற தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றிக்கு ஒத்துழைப்பு, ஆதரவு வழங்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மூத்த ஒருங்கிணைப்பாளர்கள் பெரியசாமி, நடராஜ், முருகபூபதி, வேலுசாமி, தங்கமுத்து, சம்பத்குமார், சுப்ரமணியம், சண்முகசுந்தரம், சுப்பு, ஈஸ்வரமூர்த்தி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X