பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடியில் பணி: கணினி மூலம் ஒதுக்கீடு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார்: சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள், காவலர்கள், நுண்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது.பொது பார்வையாளர்கள் சஞ்சீவ் கவுஷிக், பிரகாஷ், ஓம் பிரகாஷ், பவானி சிங் கங்கரட் ராஜேஷ்குமார் ஒக்ரே மற்றும் காவல் பார்வையாளர் பன்வர்லால் மீனா ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி

கடலுார்: சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள், காவலர்கள், நுண்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது.பொது பார்வையாளர்கள் சஞ்சீவ் கவுஷிக், பிரகாஷ், ஓம் பிரகாஷ், பவானி சிங் கங்கரட் ராஜேஷ்குமார் ஒக்ரே மற்றும் காவல் பார்வையாளர் பன்வர்லால் மீனா ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கும் 3001 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான 14,404 பணியாளர்கள், 206 நுண் பார்வையாளர்கள், 1253 காவல்துறை பணியாளர்களுக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து நிலைப் பணியாளர்களும் ஜனநாயக முறைப்படி பணி செய்ய அறிவுறுத்தப்பட்டது.எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், டி.ஆர்.ஓ., அருண்சத்யா, மாவட்ட தகவல் அலுவலர் அருள்மொழி தேர்தல் தாசில்தார் பாலமுருகன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X