பொது செய்தி

இந்தியா

தமிழக - கேரள எல்லை தேர்தல் நாளன்று மூடல்?

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கொச்சி : கேரளாவில், ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இருக்கும் மூன்று தொகுதிகளுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான எல்லைப் பகுதிகள் மூடப்பட உள்ளன. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுநாள், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, தமிழகத்துடன் எல்லையை பகிர்ந்திருக்கும் உடும்பஞ்சோலா,

கொச்சி : கேரளாவில், ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இருக்கும் மூன்று தொகுதிகளுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான எல்லைப் பகுதிகள் மூடப்பட உள்ளன.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுநாள், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, தமிழகத்துடன் எல்லையை பகிர்ந்திருக்கும் உடும்பஞ்சோலா, பீருமேடு மற்றும் தேவிக்குளம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளிலும், சில பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன.ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று, இந்த மூன்று தொகுதிகளுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான எல்லைப் பகுதிகளை மூடக்கோரி, ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் வேட்பாளர்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

தமிழகம் மற்றும் கேரளாவின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள், இரண்டு மாநிலங்களிலும் ஓட்டுப்போட வாய்ப்பிருப்பதாக, அவர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டது.இந்த மனு தொடர்பாக, தேர்தல் கமிஷன், நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. மனுவில் கோரப்பட்டுள்ளதை போல், தேர்தல் நடக்கும் நாளன்று, குறிப்பிட்ட இந்த மூன்று தொகுதி களுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான எல்லைப் பகுதிகளை மூட, தேர்தல் கமிஷன் சம்மதம் தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X