பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு வந்தடைந்தது

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா தடுப்புக்காக, மத்திய அரசிடம் இருந்து, 13.16 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள், நேற்று தமிழகத்திற்கு வந்தடைந்தன.கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, நாடு முழுதும், ஜன., 16 முதல், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதாரம், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு, வயது வரம்பு இல்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது.மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் தடுப்பூசி

சென்னை : கொரோனா தடுப்புக்காக, மத்திய அரசிடம் இருந்து, 13.16 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள், நேற்று தமிழகத்திற்கு வந்தடைந்தன.கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, நாடு முழுதும், ஜன., 16 முதல், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சுகாதாரம், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு, வயது வரம்பு இல்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது.மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.இதற்காக, முதற்கட்டமாக மத்திய அரசிடமிருந்து, 39 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழக அரசு பெற்றது. இதுவரை, 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து நேற்று காலை, 2.14 லட்சம் டோஸ் கோவாக்சின்; மாலை, 11.02 லட்சம் கோவிஷீல்டு என, 13.16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

இவை, சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சேமிப்பு மருந்து கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தொற்று தடுப்பில் கவனம்!அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சுகாதார இணை இயக்குனர்களுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா தொற்று வேகமாக பரவுவதை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை, 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

 தனிமைப்படுத்தப் பட்டோரால், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதுடன் கண்காணிக்க வேண்டும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதுடன், ஆக்சிஜன் வசதிகளை உறுதி செய்ய வேண்டும். தேவையான மருந்து, மருத்துவ சாதனங்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் ஒரு தெருவில் மூன்று நபர்களுக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டால், அப்பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். எனவே, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப தடுப்பூசி களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X