முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ள மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
ஹூக்ளி மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: சிங்குர் மாவட்டத்தில் கார் தொழிற்சாலை அமையவிருந்ததை, தன் அரசியல் நோக்கங்களுக்காக மம்தா பானர்ஜி எதிர்த்தார். அதனால், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி அடையவில்லை. விவசாயிகளுக்காக போராடியதாக கூறிய அவர், விவசாயிகளுக்கும் எதையும் செய்யவில்லை.சொந்த அரசியல் காரணங்களுக்காக மாநிலத்தையும், மாநில மக்களையும் ஏமாற்றிய ஒரே கட்சி, திரிணமுல் காங்., தான். தற்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், தேர்தல் ஆணையம் குறித்தும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் குறித்தும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
பணம் வாங்கிக் கொண்டு, என் கூட்டங்களுக்கு மக்கள் வருவதாகக் கூறி, மேற்கு வங்க மக்களையும் அவமதித்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE