வரித்துறை சோதனைக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வரித்துறை சோதனைக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : ''தி.மு.க.,வினரின் வீடுகளில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு, அரசியல் சாயம் பூச வேண்டாம்,'' என, தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நரசிம்மன் தெரிவித்தார். சென்னை, கமலாலயத்தில், அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான், தமிழக மக்களின் விருப்பம். கருத்து கணிப்பு என்ற பெயரில், கருத்து திணிப்பு

சென்னை : ''தி.மு.க.,வினரின் வீடுகளில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு, அரசியல் சாயம் பூச வேண்டாம்,'' என, தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நரசிம்மன் தெரிவித்தார்.

சென்னை, கமலாலயத்தில், அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான், தமிழக மக்களின் விருப்பம். கருத்து கணிப்பு என்ற பெயரில், கருத்து திணிப்பு நடத்தப்படுகிறது. மக்கள், பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற வைப்பர்.தற்போது, தி.மு.க., வினர் வீடுகளில் நடந்த சோதனைக்கு, அரசியல் சாயம் பூச கூடாது. வருமான வரித்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள், தங்கள் கடமையை ஆற்றியுள்ளனர்.வரித்துறை சோதனையை வைத்து, தி.மு.க.,வினர் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது.

உலக நாடுகளில், இந்தியா மீது மரியாதையை உருவாக்கியது, பா.ஜ., அரசு. அதற்கு காரணம், பிரதமர் மோடி. பிரதமரை பற்றி பேச உதயநிதிக்கு, எந்த தகுதியும் இல்லை. அவர், பிரதமர் முன், ஒரு துக்கடா. சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X