பொது செய்தி

தமிழ்நாடு

மொழிபெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியன் காலமானார்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை : சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியன், 90, கொரோனா தொற்றால் நேற்று காலமானார். நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் எச்.பாலசுப்பிரமணியன். டில்லியில் உள்ள, மத்திய அரசின் ஹிந்தி இயக்குனரக துணைத் தலைவர், ஜவஹர்லால் நேரு பல்கலையின், ஹிந்தி மொழித் துறை வருகைப் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

சென்னை : சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியன், 90, கொரோனா தொற்றால் நேற்று காலமானார்.

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் எச்.பாலசுப்பிரமணியன். டில்லியில் உள்ள, மத்திய அரசின் ஹிந்தி இயக்குனரக துணைத் தலைவர், ஜவஹர்லால் நேரு பல்கலையின், ஹிந்தி மொழித் துறை வருகைப் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர். ஹிந்தி மொழி இலக்கியங்களை அதிகம் மொழி பெயர்த்தார். அதேபோல, தமிழின் பிரபல எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், வைரமுத்து உள்ளிட்ட பலரின் படைப்புகளை ஹிந்தியில் மொழி பெயர்த்தவர். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டில்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் காலமானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X