ஓட்டுச்சாவடிகளுக்கு கொரோனா, 'கிட்' எடுத்து செல்ல, கூடுதல் வாகனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்களுக்கு முக கவசம், கையுறை, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்படுகிறது. வழக்கமாக ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேனில் எடுத்து செல்லப்படும். இம்முறை, வேன், மண்டல அலுவலர் கார் மட்டுமல்லாது, கொரோனா, 'கிட்' எடுத்து செல்ல, கூடுதலாக ஒரு சரக்கு ஆட்டோவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை, வட்டார போக்குவரத்து துறை ஏற்பாடு செய்து கொடுக்க, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE