சென்னை, : 'அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் தேவையின்றி சோதனை நடத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபுமுருகவேல், தேர்தல் கமிஷனுக்கு, புகார் அனுப்பி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:வருமான வரித்துறையினர் ஒரு வாரமாக, தமிழக அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில், சோதனை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில், அரசியல் நகர்வு உள்ளது தெளிவாகிறது.அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எனவே, தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்கள், உயர் அதிகாரிகள் துணையோடு, அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், சோதனை நடத்த துாண்டி உள்ளனர். அ.தி.மு.க., தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்காக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.மேலும், சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, தவறான பிரசாரத்தை, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் மேற்கொள்கிறது.
இது, அ.தி.மு.க., மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதுடன், தி.மு.க., கூட்டணிக்கு அரசியல் லாபத்தை தரும்.எனவே, வருமான வரித்துறை தேவையின்றி சோதனை நடத்துவதை, தேர்தல் கமிஷன் கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருமான வரி சோதனை குறித்து, தி.மு.க., தரப்பிலும், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE