தமிழக தேர்தல் களத்தில், தி.மு.க.,வுக்காக சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்த, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பிரசாரத்தின்போது கூட்டமாய் பணியாற்றிய அரசியல்வாதிகள் உஷாராய், கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வது, மிக மிக அவசியம் என்று, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை பரவ துவங்கி உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், நோய் தொற்று பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
திரண்டனர் : இது தவிர, பஞ்சாப், கர்நாடகா, சட்டீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அசாம், டில்லி மற்றும் தமிழகத்தில், நோய் பரவல் தினமும் அதிகரித்தபடி உள்ளது.தினசரி நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மாநிலத்தில், பிப்., மாதம், 500க்கு கீழ் இருந்தது. தற்போது, படிப்படியாக அதிகரித்து, 3,000ஐ தாண்டியுள்ளது.தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. தலைவர்கள் பிரசாரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற, கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை.
இது, நோய் பரவல் அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகி உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்களில், பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அறிகுறி தென்பட்டதுகுறிப்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்; சோழிங்கநல்லுார் தி.மு.க., வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்; அம்பத்துார் தி.மு.க., வேட்பாளர் ஜோசப் சாமுவேல்; மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு, பொன்ராஜ்; தே.மு.தி.க., வேட்பாளர்கள் மோகன்ராஜ், பார்த்தசாரதி உட்பட பலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க., மகளிர் அணி செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி, 53, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும், தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.அதைத் தொடர்ந்து அவருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை, சி.ஐ.டி., காலனியில் உள்ள, அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.அதன்பின், டாக்டர்கள் ஆலோசனையின்படி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில், நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு, பாதிப்புகள் அல்லாத, முதல்நிலை தொற்று இருப்பதால், டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அலட்சியம்அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து, விரைவில் வீடு திரும்புவார் எனவும், டாக்டர்கள் தெரிவித்தனர்.அதேநேரம், 'கனிமொழி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து, எங்களுக்கு தகவல் இல்லை' என, தேனாம்பேட்டை மண்டல சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இது, மாநகராட்சி சுகாதாரத் துறையின் அலட்சியத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.பரவல் வேகம்கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால், கூட்டமாக தேர்தல் பணியாற்றிய அரசியல்வாதிகள் அனைவரும், உஷாராக இருப்பது நல்லது. முன்னெச்சரிக்கையாக, அனைவரும் பரிசோதனை செய்து கொள்வதும், மிக மிக அவசியம் என்று, சுகா தாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அவர்கள் பரிசோதனை செய்து கொள்வதை, சம்பந்தப்பட்ட கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். இது, நோய் பரவல் வேகத்தை தடுக்க உதவும்.தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, தேர்தல் பணியில் ஈடுபட்ட, 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கனிமொழிக்கு கொரோனா!தி.மு.க.,வுக்காக சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்த...கூட்டமாய் பணியாற்றிய அரசியல்வாதிகளே உஷார்!பரிசோதனை செய்வது மிக மிக அவசியம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE