பொது செய்தி

தமிழ்நாடு

பிரசாரத்தில் அமைச்சர் அறிவிப்பு: விசைத்தறியாளர்கள் நம்பிக்கை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பல்லடம்:பிரசாரத்தின் போது அமைச்சர் வேலுமணி பேசியது, திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் மத்தியில் ஆறுதல் அளித்துள்ளது.கூலி உயர்வு ஒப்பந்தம், வங்கி கடன் பிரச்னை உள்ளிட்டவற்றால், திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வங்கிக் கடனுக்காக ஜப்தி, ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது விசைத்தறியாளர்கள் மத்தியில் கவலையை

பல்லடம்:பிரசாரத்தின் போது அமைச்சர் வேலுமணி பேசியது, திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் மத்தியில் ஆறுதல் அளித்துள்ளது.கூலி உயர்வு ஒப்பந்தம், வங்கி கடன் பிரச்னை உள்ளிட்டவற்றால், திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வங்கிக் கடனுக்காக ஜப்தி, ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது விசைத்தறியாளர்கள் மத்தியில் கவலையை அளித்து வருகிறது.கடந்த ஆட்சியின் போது, விசைத்தறியாளர்கள் பெற்ற வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் என, முதல்வர் பழனிசாமி வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.இச்சூழலில், கருமத்தம்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கூறிய பதில், விசைத்தறியாளர்கள் மத்தியில் ஆறுதல் அளித்துள்ளது.விசைத்தறியாளர்கள் கூறியதாவது:தொழில் நெருக்கடி நிலையை சமாளிக்க வங்கி கடன் தள்ளுபடி ஒன்றே தீர்வு. முதல்வர் அறிவித்தபடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என நம்பிக்கையுடன் இருந்தோம். அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.மீண்டும், ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மன உளைச்சலில் இருந்த நுாற்றுக்கணக்கான விசைத்தறியாளர்களுக்கு அமைச்சரின் பேச்சு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X