சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2,051 மது பாட்டில் பறிமுதல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி அருகே, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, வீட்டில், பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்ட, 2,051 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அ.தி.மு.க., நிர்வாகியும், மருமகனும் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகேசன், 57; அ.தி.மு.க., கிளை பொறுப்பாளர். இவரது மனைவி பேபி. அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய

அவிநாசி : அவிநாசி அருகே, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, வீட்டில், பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்ட, 2,051 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன;

அ.தி.மு.க., நிர்வாகியும், மருமகனும் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகேசன், 57; அ.தி.மு.க., கிளை பொறுப்பாளர். இவரது மனைவி பேபி. அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய மகளிரணி செயலர். இவர்களது வீட்டில், மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் பார்வையாளருக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்குளி பி.டி.ஓ., சாந்திலட்சுமி தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, முருகேசன் வீட்டில் உள்ள குடோனில் ஆய்வு செய்தனர்.இதில், பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் சிக்கின.

பிராந்தி, பீர் என, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,051 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.பி.டி.ஓ., சாந்திலட்சுமி புகார்படி, சேவூர் போலீசார், முருகேசன், அவரது மருமகன் அய்யப்பன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில், 'தேர்தல் நாளில், வாக்காளர்களுக்கு வழங்க, சிறிது சிறிதாக டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கி, பதுக்கி வைத்துள்ளனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X