நம்ம ஊரில் வெளி மாநில நூல் மையம்! இனி, தட்டுப்பாடு இருக்காது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நம்ம ஊரில்' வெளி மாநில நூல் மையம்! இனி, தட்டுப்பாடு இருக்காது

Added : ஏப் 04, 2021
Share
திருப்பூர்:ஆந்திரா, தெலுங்கானா மாநில நுாற்பாலைகளின் வர்த்தக மையம், திருப்பூரில் அமைய உள்ளது. நுால் தட்டுப்பாடு மற்றும் விலையை கட்டுப்படுத்த, ஏ.இ.பி.சி., இப்புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) மற்றும் 'சிட்டி' அமைப்பு சார்பில், ஆந்திரா, தெலுங்கான நுாற்பாலை சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு கூட்டம் ஆன்லைனில்
 'நம்ம ஊரில்' வெளி மாநில நூல் மையம்! இனி, தட்டுப்பாடு இருக்காது

திருப்பூர்:ஆந்திரா, தெலுங்கானா மாநில நுாற்பாலைகளின் வர்த்தக மையம், திருப்பூரில் அமைய உள்ளது. நுால் தட்டுப்பாடு மற்றும் விலையை கட்டுப்படுத்த, ஏ.இ.பி.சி., இப்புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) மற்றும் 'சிட்டி' அமைப்பு சார்பில், ஆந்திரா, தெலுங்கான நுாற்பாலை சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு கூட்டம் ஆன்லைனில் நடந்தது.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு(சிட்டி) தலைவர் ராஜ்குமார், ஆந்திரா நுாற்பாலை சங்க தலைவர் பிரசாத், தெலுங்கானா நுாற்பாலை சங்க தலைவர் அகர்வால், 'டெக்ஸ்புரோசில்' தலைவர் மனோஜ்குமார் பட்டோடியா உட்பட பல்வேறு தொழில் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:நுால் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடால், திருப்பூர் பின்னலாடை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வுகாணும்வகையில், ஆந்திரா, தெலுங்கானா நுாற்பாலை சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.ஆந்திராவில், 120 நுாற்பாலைகள், 35 லட்சம் கதிர்கள் உற்பத்தி திறன் கொண்டுள்ளன; தெலுங்கானாவில், 33 நுாற்பாலைகள், மொத்தம் 15 லட்சம் கதிர் உற்பத்தி திறன் கொண்டுள்ளன. இவ்விரு மாநில நுாற்பாலை பிரதிநிதிகளிடம், திருப்பூரில், தங்கள் நுால் வர்த்தக அலுவலகங்களை திறக்கவேண்டும் எனவும்; இதற்கு தேவையான வசதிகளை ஏ.இ.பி.சி., செய்துதரும் எனவும் தெரிவித்தோம்.கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்; எனவே, ஆந்திரா, தெலுங்கானா நுாற்பாலைகளில் வர்த்தக மையங்கள், திருப்பூரில் விரைவில் திறக்கப்படும்.நுால் கொள்முதல் செய்யும் ஆடை உற்பத்தி துறையினர் - நுால் விற்பனை செய்யும் நுாற்பாலை துறையினர் வசதிக்காக போர்ட்டல் சேவைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.இதனால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, நுால் தட்டுப்பாடு இன்றி, சீரான விலையில் கிடைக்கும். 'தமிழகத்தில் இம்மாதம் நுால் விலை உயர்வு இல்லை,' என, 'சிட்டி' தலைவர் ராஜ்குமார் கூட்டத்தில் தெரிவித்தார்.அவரிடம், கிலோவுக்கு 15 ரூபாய், நுால் விலையை குறைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இதுபோன்று தொடர் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, நுால் தட்டுப்பாடு நீக்கப்படும்; விலையும் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X