அவிநாசி,:அவிநாசி ஒன்றிய அளவில், அதிகளவு ஓட்டுக்களை பெற்று 'கெத்து' காண்பிக்கும் நோக்கில், அ.தி.மு.க., நிர்வாகிகள் வேகம் காட்டி வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வுடன் இணைந்திருந்த அவிநாசி ஒன்றியம் மற்றும் நகரப் பகுதிகள், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வுடன் இணைக்கப்பட்டன. அவிநாசியில் உள்ள, 31 கிராம ஊராட்சிகள், 3 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, ஒன்றிய செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.மேற்கு ஒன்றியத்தில், 45 ஆயிரம் ஓட்டு, வடக்கு ஒன்றியத்தில், 36 ஆயிரம் ஓட்டு, தெற்கு ஒன்றியத்தில், 42 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில், செயலாளர் பொறுப்பில், மூத்த கட்சியினர் அங்கம் வகிக்கும் நிலையில், தங்கள் ஒன்றிய அளவில் அதிக ஓட்டுக்களை தக்க வைப்பதில் தான் அவர்களின் அரசியல் அடங்கியிருக்கிறது என கருதுகின்றனர்.எனவே, அவரவர் ஒன்றியளவில் அதிக ஓட்டுக்களை அறுவடை செய்யும் நோக்கில் களப்பணியாற்றி வருகின்றனர். அதே போல், அவிநாசி, திருமுருகன்பூண்டி நகர பகுதிகளிலும், அதிகளவு ஓட்டுக்களை அறுவடை செய்வதில், கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE