'உத்தர பிரதேச மாநிலம், காசியில், காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும்' என, பிரதமர் மோடியிடம், பா.ஜ., கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரசாரத்துக்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியிடம், காயத்ரி மனு ஒன்றை கொடுக்க, அதை படித்துப் பார்த்த மோடி, செய்து கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.மனுவில் காயத்ரி கூறியிருப்பதாவது:காமராஜர், தேசிய அளவில் மிகப்பெரிய தலைவர். இந்திய அரசியலில், நெருக்கடியான கால கட்டத்தில் பிரதமர்களை உருவாக்கியவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.இந்திய அளவில், பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கியமான தலைவர் காமராஜர்.
\\\\\\தமிழகத்தில், நாடார் சமுதாயத்தை போன்றே, நாட்டின் பிற மாநிலங்களில் வாழும், பனையேறும் சமுதாயங்களான ஜெய்ஸ்வால், பண்டாரி, அலுவாலியா போன்ற சமுதாயங்களுக்கு, பா.ஜ., முக்கியத்துவம் அளிக்கிறது. உத்தர பிரதேசத்தின் பா.ஜ., மேயர்கள் பலர், ஜெய்ஸ்வால் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஜெய்ஸ்வால் சமூகத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும் தாங்கள், உத்தர பிரதேசத்தின் காசி நகரில், அந்த சமுதாயத்தை போலவே இருக்கும், நாடார் சமுதாயத்தில் இருந்து வந்த காமராஜருக்கு சிலை அமைக்க உதவ வேண்டும். மதிய உணவு திட்டத்திற்கும், காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE