கோவை : ''பணம் கொடுக்க வருவோர் முகத்தை, 'போட்டோ' எடுத்து எனக்கு அனுப்பி வையுங்கள். போட்டோ அனுப்புவோர் வீட்டுக்கு நான் காபி குடிக்க வருவேன்,'' என, ம.நீ.ம., தலைவர் கமல் பேசினார்.
கோவை, சிங்காநல்லுார் தொகுதி ம.நீ.ம., வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, நேற்று கமல் பேசியதாவது:ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், 'கிரிமினல்' மட்டுமல்ல; மக்கள் வாழ்க்கையை ஐந்து ஆண்டுகள் களவாட வந்தவர்கள். தேர்தலுக்கு பணம் கொடுத்து, உங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர். நீண்டகால விளைவை எண்ணி, மக்கள் பணத்தை மறுக்க வேண்டும். அப்படி மறுத்தால் சரித்திரத்தில் பேசப்படும்.நான் ஜனநாயகத்தை தோளில் சுமப்பவன். பணம் தரும் கட்சிகள், பண நாயகத்தை சுமப்பவர்கள்.பணம் கொடுக்க வருவோர் முகத்தை தெளிவாக தெரியும்படி, 'போட்டோ' எடுத்து எனக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறு போட்டோ அனுப்புவோர் வீட்டுக்கு, நான் காபி குடிக்க வருவேன். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE