பொது செய்தி

இந்தியா

தேக்கடி ரோஸ் பார்க்கில் குவியும் சுற்றுலா பயணிகள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
குமுளி : கடுமையான வெப்பத்தை சமாளிக்க தேக்கடி ரோஸ் பார்க்கில் சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்துள்ளனர். கேரளா குமுளியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது தேக்கடி ரோஸ் பார்க். இங்கு ஏராளமான மலர் வகை செடிகள், தொங்கும் தோட்டம், பலவகையான மரங்கள் உள்ளன. தண்ணீரில் விளையாடும் வகையில் பெடல் மற்றும் துடுப்பு படகுகள் வசதிகள் உள்ளன. ஆகாய சைக்கிள், மூலிகைத் தோட்டம்,

குமுளி : கடுமையான வெப்பத்தை சமாளிக்க தேக்கடி ரோஸ் பார்க்கில் சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்துள்ளனர்.

கேரளா குமுளியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது தேக்கடி ரோஸ் பார்க். இங்கு ஏராளமான மலர் வகை செடிகள், தொங்கும் தோட்டம், பலவகையான மரங்கள் உள்ளன. தண்ணீரில் விளையாடும் வகையில் பெடல் மற்றும் துடுப்பு படகுகள் வசதிகள் உள்ளன. ஆகாய சைக்கிள், மூலிகைத் தோட்டம், உயிரோட்டமாக தெரியும் பல்வேறு தலைவர்கள் மற்றும் நடிகர்களின் மெழுகு உருவச் சிலை ஆகியவை சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.கடுமையான வெப்பம் நிலவும் நேரத்திலும் குளுமையான காற்று வீசுவதால் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து வருகின்றனர்.

காலை 10:30 மணியில் இருந்து மாலை 6:30 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. நுழைவுக்கட்டணமாக தலா ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X