மாணவிக்கு மருத்துவ சீட் வாய்ப்பு மறுப்பு இழப்பை ஈடு செய்ய முடியாது: ஐகோர்ட்| Dinamalar

மாணவிக்கு மருத்துவ 'சீட்' வாய்ப்பு மறுப்பு இழப்பை ஈடு செய்ய முடியாது: ஐகோர்ட்

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (2)
Share
மதுரை : மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெற, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் படித்ததை குறிப்பிட, விண்ணப்பத்தில் வழிவகை செய்யாததால், மாணவிக்கு வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டுள்ளது.ஆறாவது

மதுரை : மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெற, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் படித்ததை குறிப்பிட, விண்ணப்பத்தில் வழிவகை செய்யாததால், மாணவிக்கு வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டுள்ளது.ஆறாவது வகுப்புசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஏரியூரைச் சேர்ந்த சகிலா பானு தாக்கல் செய்த மனு:என் மகள் ஷபானா; ஆறாவது வகுப்பு வரை, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் - ஆர்.டி.இ., தனியார் பள்ளியில் படித்தார்.ஏழு முதல் பிளஸ் 2 வரை ஏரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தார். பிளஸ் 2வில், 600க்கு, 539 மதிப்பெண், நீட் தேர்வில், 425 மதிப்பெண் பெற்றார்.மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை, தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கு ஷபானா விண்ணப்பித்தார்.

அதில், மாணவர் ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழகத்தில் படித்தவரா, எந்த அரசுப் பள்ளியில் படித்தவர் என கேள்விகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளியில் மாணவர்கள் படித்ததை குறிப்பிடுவதற்கு விண்ணப்பத்தில் வழிவகை செய்யவில்லை. எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், ஆறாவது வகுப்பு வரை படித்ததை குறிப்பிட முடியவில்லை.இடஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் பட்டியலில், ஷபானா பெயரை அதிகாரிகள் சேர்க்கத் தவறிவிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தவறால், ஷபானா பாதிக்கப்பட்டுள்ளார்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில், ஷபானாவிற்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார். நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.அரசுத் தரப்பு, '2020 - 21 கல்வியாண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்து விட்டது. இடங்களும் பூர்த்தியாகி விட்டன' என தெரிவித்தது.நீதிபதி உத்தரவுதமிழக அரசின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசு மருத்துவக் கல்லுாரியில் சேரும் மதிப்புமிக்க வாய்ப்பு, மனுதாரர் மகளிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்ததை குறிப்பிடும் வகையில், விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவாக வடிவமைக்காமல், கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர்.இதனால், மருத்துவப் படிப்பு கனவுடன் இருந்த இம்மாணவிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது கொடுமை. பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் மகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கினாலும், இழப்பை ஈடு செய்ய முடியாது.தார்மீக அடிப்படையில், மனுதாரர் மகளுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், எதிர் வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.ஒருவேளை நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பை யாரும் பாதியில் கைவிட்டால், யாரும் படிப்பில் சேராமல் இருந்தால், அந்த இடத்தில் தாமதமின்றி மனுதாரர் மகளுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் அளிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X