இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்நக்சலைட் தாக்குதல் 5 வீரர்கள் மரணம்பீஜப்பூர்: சத்தீஸ்கரில், நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள், நேற்று வீர மரணம் அடைந்துள்ளனர்.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள பீஜப்பூர் மாவட்டம் டாரெம் பகுதி யின் சிலேகர் வனப்பகுதியில், நக்சலைட்டுகள், பதுங்கி
today, crime round up, இன்றைய, கிரைம்,  ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்நக்சலைட் தாக்குதல் 5 வீரர்கள் மரணம்

பீஜப்பூர்: சத்தீஸ்கரில், நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள், நேற்று வீர மரணம் அடைந்துள்ளனர்.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள பீஜப்பூர் மாவட்டம் டாரெம் பகுதி யின் சிலேகர் வனப்பகுதியில், நக்சலைட்டுகள், பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.இதில், ஐந்து பாதுகாப்பு படையினர், வீர மரணம் அடைந்தனர்; மேலும், 12 பேர் காயம்அடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை தொடரும் நிலையில், பெண் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டதாக, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் 2 'டோஸ்' நர்ஸ் அலட்சியம்

கான்பூர்: உத்தர பிரதேசத்தில், மொபைல் போனில் பேசியபடி, ஒரு பெண்ணுக்கு, ஒரே நேரத்தில், இரண்டு, 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்ஸ் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, கான்பூர் தேஹத் மாவட்டம் அக்பர்பூர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் குமாரி, 50, சமீபத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றார். அங்கிருந்த உதவி நர்ஸ் அர்ச்சனா, மொபைல் போனில் பேசிக்கொண்டே, அவருக்கு தவறுதலாக இரண்டு, 'டோஸ்' தடுப்பூசிகளை செலுத்திஉள்ளார்.இதனால், கமலேஷ் குமாரி கையில் வீக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து கமலேஷ் குமாரி கேட்டபோது, தன் தவறை உணராத அர்ச்சனா, அவருடன் தகராறு செய்தார். தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ அதிகாரி, நடந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை முடிவில், நர்ஸ் அர்ச்சனா மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லஞ்சமாக பாலியல் உறவு? போலீஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'

ராஜஸ்தானில், பெண்ணின் புகார் குறித்து விசாரிக்க, பாலியல் உறவை லஞ்சமாக கேட்ட போலீஸ் அதிகாரி, பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள ஜெய்ப்பூரில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும், போலீஸ் சிறப்பு பிரிவின் உதவி கமிஷனராக இருந்தவர் கைலாஷ் போஹ்ரா, 52.ஒரு பெண் கொடுத்த, பாலியல் வன்முறை உள்ளிட்ட மூன்று புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த, இவர் லஞ்சம் கேட்டுள்ளார்.'என்னிடம் பணம் இல்லை' என, அந்த பெண் கூறியதால், பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவை, கடந்த மாதம் கைது செய்தனர்.இதையடுத்து, பணியில் இருந்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 'இந்த நடவடிக்கை போதுமானது அல்ல' என, சட்டசபையில், பா.ஜ., உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.இந்நிலையில், கவர்னர் ஒப்புதலுடன், உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவை, பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்து, மாநில அரசு, தற்போது உத்தரவிட்டுள்ளது.

.வேட்பாளர் சுட்டுக்கொலை

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோரக்பூர் மாவட்டம் நாராயண்பூரில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் பிரிஜேஷ் சிங், 52, நேற்று முன்தினம், பிரசார கூட்டம் முடிந்து வீடு திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மூவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்

மேலும் ஒருவர் கைது

ஜான்சி: உத்தர பிரதேசத்தின் ஜான்சியில், கடந்த மாதம் ரயிலில் சென்ற இரு கன்னியாஸ்திரிகள் மீது, சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹிந்து அமைப்பைச் சேர்ந்த இருவரை, சமீபத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் அடுத்ததாக, அஜய் சங்கர் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் கூறி உள்ளனர்.


latest tamil news
தமிழக நிகழ்வுகள்

அ.தி.மு.க.,பிரமுகர் வேன்கள் தீக்கிரை ; தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு

துாத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தேர்தல் மோதலில் அ.தி.மு.க.,பிரமுகருக்கு சொந்தமான 3 வேன்களுக்கு கும்பல் தீ வைத்தது. கோவில்பட்டியில் ஒரு பரோட்டா கடையை அடித்துச்சேதப்படுத்தினர்.

துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஜெகவீரபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவர் புதுார் யூனியன் சேர்மனும், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருமான சுசீலா தனஞ்செயனின் உறவினர். தாஸ்க்கு சொந்தமான 4 வேன்கள் தேர்தலில் அ.தி.மு.க.,வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்களை ஏற்றிவர பயன்படுத்தி வந்தார். இதனால் ஆத்திரமுற்ற தி.மு.க.,வினர் தாசை தாக்கினர். நேற்று இரவில் அவரது 3 வேன்களுக்கும் தீ வைத்தனர். இதில் ஒரு வேன் முற்றிலுமாக தீக்கிரையானது.

கும்பல் தாக்கியதில் காயமுற்ற தாஸ், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காடல்குடி போலீசார், ஜெகவீரபுரம் ஊராட்சி தலைவரும் தி.மு.க.,பிரமுகருமான அழகுபாண்டி உள்ளிட்ட 4 பேர் கும்பல் மீது வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர்

பாலத்தின் மீது கார் மோதி விபத்து

அவிநாசி:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 57. மனைவி ரேவதி, 51. அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, 57, ஆகியோர் ஒரு காரில் அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.சேவூர் - பந்தம்பாளையம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் , பன்னீர் செல்வம், ரேவதி, பழனிசாமி ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


latest tamil newsவடலுார் அருகே ரூ.11.38 லட்சம் பறிமுதல்
வடலுார்: கடலுார் அருகே பறக்கும் படையினரை பார்த்தவுடன் கீழே போட்டு விட்டுச் சென்ற 11.38 லட்சம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.தேர்தலில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிதம்பரம் தனி தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எஸ்.புதுார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் வாழைத்தோட்டம் அருகே நின்றிருந்த சிலர், பறக்கும் படை அதிகாரிகள் சென்ற வாகனத்தைப் பார்த்ததும், அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை செய்தபோது, பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டு கிடந்த பணக் கட்டுகளை எடுத்து எண்ணிப் பார்த்தனர். அதில், 11 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.உடன் பணத்தை, குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.மேலும், பணத்தை போட்டு விட்டுச் சென்றவர்கள் யார். எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கண்டக்டரை தாக்கிய நால்வருக்கு வலை

சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டரைத் தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கும்பகோணம் அடுத்த கண்டிராமாணிக்கம் பரப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 54; அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு பஸ்சில் பணியில் இருந்தார்.பஸ் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் பஸ்சின் முன்னால் மறித்து நின்றது.காரில் இருந்து இறங்கிய 4 பேர் பஸ்சில் ஏறி டிரைவர் ரமேஷ்குமாரிடம், வழி விடாமல் பஸ்சை ஓட்டிச் செல்கிறாய் எனக் கூறி, தாக்கினர். தடுத்த கண்டக்டர் மாதவனையும் 47; தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர்.சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

ரூ.412.11 கோடி பறிமுதல்

சென்னை : தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, 412.11 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வருமான வரித்துறையினர், ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் வரை, சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 210.68 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், 3.66 கோடி ரூபாய் மதுபானம்; 2.20 கோடி ரூபாய் கஞ்சா; 521.86 கிலோ தங்கம்; 662.73 கிலோ வெள்ளி மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 412.11 கோடி ரூபாய்.

பறக்கும் படை சோதனை: ரூ.1.22 லட்சம் பறிமுதல்
பல்லடம்:பல்லடத்தில் நடந்த வாகன சோதனையில், நேற்று இருவரிடம் இருந்து, 1.22 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பல்லடம் அடுத்த அவிநாசிபாளையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியை சேர்ந்த சபாப் பாஷா, 29 வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அவரிடம், இருந்த 54,500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் பெரிச்சி பாளையம் சேர்ந்தவர் சுப்பிரமணியம், 56; விவசாயி. நேற்று, ஈரோடு கால்நடை சந்தை சென்றுவிட்டு, மாடுகள் விற்பனை செய்த வகையில், 67 ஆயிரத்து 900 ரூபாய் வைத்திருந்தார்.இதற்கான ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் தொகையை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். 1.22 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

பரஸ்பர நிதியில் ரூ.28 ஆயிரம் கோடி இழப்பு

சென்னை : பரஸ்பர நிதி திட்ட மோசடி குறித்த வழக்கை விசாரிக்க, நிபுணத்து வம் பெற்றவர்களை, பொருளாதார குற்றப்பிரிவில் ஈடுபடுத்துவது குறித்து, தலைமை செயலர் அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'பிராங்கிளின் டெம்பிள்டன் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் முதலீட்டை திரட்டியது.புகார்கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டி தகவல் தெரிவிக்காமல், ஆறு பரஸ்பர நிதி திட்டங்களை நிறுத்தி விட்டது. இந்த மோசடியால், 3.15 லட்சம் முதலீட்டாளர்களுக்கு, 28 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்த நிறுவனத்துக்கு எதிராக, கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் என்பவர், புகார் அளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X