சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஸ்டாலின் சுயபுத்திக்காரர் அல்ல!

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ரா.சண்முகசுந்தரம், அவிநாசி, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, 400 கோடி ரூபாயை வாரி இரைத்து இருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல... தான் எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்பதற்காக!'பிராமண எதிர்ப்பு' கோஷம் வலுத்து காணப்படும், தி.மு.க., தன் சுயநலத்திற்காக, பிரசாந்த் கிஷோர் என்ற
 இது உங்கள் இடம்

ரா.சண்முகசுந்தரம், அவிநாசி, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, 400 கோடி ரூபாயை வாரி இரைத்து இருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல... தான் எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்பதற்காக!'பிராமண எதிர்ப்பு' கோஷம் வலுத்து காணப்படும், தி.மு.க., தன் சுயநலத்திற்காக, பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணர் நடத்தி வரும், 'ஐபேக்' என்ற, 'கார்ப்பரேட்' நிறுவனத்திடம், இவ்வளவு கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து, தேர்தலுக்கான ஆலோசனையைப் பெறுகிறது.'கார்ப்பரேட் என்ற சொல்லே, அபாயம்' எனக் கதறும் கம்யூனிஸ்ட்கள், கார்ப்பரேட் நிர்வகிக்கும், தி.மு.க.,விடம், தேர்தல் கூட்டணிக்காக கெஞ்சியது வேறு கதை!தி.மு.க., பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் நடப்பது, பேசுவது, கை அசைப்பது என, அனைத்திற்கும், ஐபேக் கார்ப்பரேட் நிறுவனம் தான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை கவனித்து வருகிறது.ஒருவேளை, இந்தத் தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், அதற்கு முழுமுதற் காரணம், ஐபேக் தான்.தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுப்பதற்கே ஸ்டாலின், ஒரு கார்ப்பரேட் கம்பெனியை நாடுகிறார் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிர்வாகத்தை மட்டும், சுயசிந்தனையோடு திறம்பட நடத்துவாரா?நிச்சயமாக, 'ஆட்சி நடத்துவது எப்படி?' என்பதற்கும், ஐபேக் நிறுவனத்திடம், மேலும் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து, ஆலோசனைக் கேட்பார் என்பதில், சந்தேகம் இல்லை.ஸ்டாலின் சுயபுத்திக்காரர் அல்ல; சொல்புத்திக்காரர்!


இதற்கு பெயர் வேறு!


ச.ஹரிஹரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள, 259வது வாக்குறுதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர்களை இழிவுபடுத்தியுள்ளது.'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், மாற்று ஜாதிப் பெண்களை திருமணம் செய்தால், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன், 8 கிராம் தங்க காசு வழங்கப்படும்' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கிறோம்' என்ற பெயரில், ஹிந்து விரோதப் போக்கை தான், தி.மு.க., கடைப்பிடிக்கிறது. 'முஸ்லிம், கிறிஸ்துவப் பெண்களை திருமணம் செய்தாலும், நிதியுதவி அளிக்கிறோம்' என, ஏன் கூறவில்லை?இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தில் ஜாதி கலவரம் நடக்கும் என்பதில், சந்தேகமே இல்லை.மேலும், உண்மையான காதலர்களும், இந்த அறிவிப்பால், சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுவர். ஏற்கனவே, பெண்ணின் சொத்துக்காகத் தான், காதல் நாடகத்தை, தலித் இளைஞர்கள் நடத்துகின்றனர் என்ற, அவப்பெயர் உள்ளது.ஜாதி, மத பாகுபாடில்லாமல், குடும்பத்தைச் பிரிந்து வாழும் எண்ணற்ற தம்பதியரை, நாம் பார்க்கிறோம். இனி, அவர்களின் நோக்கம், 60 ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் தான் என, நினைக்கத் தோன்றும்.'பிற ஜாதி பெண்களைக் காதலித்து மணம் முடித்தால், பணம் தருகிறேன்' எனக் கூறுவது, அநாகரிகமானது. இதற்கு பெயர், வேறு!


பேச்சில் துர்நாற்றம் வீசுகிறது!


என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் தரக்குறைவாக பேசும் போது, அவர்கள் மீது, இ.பி.கோ., பிரிவுகளின்படி எத்தனையோ அவதுாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லாம் காலப்போக்கில் வலுவிழந்து, காலாவதியாகி விடுகின்றன.'பேச்சுரிமை' என்பதை, நம் அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். அதனால் தான், அவர்கள் அத்துமீறி அநாகரிகமாக பேசுகின்றனர்.தி.மு.க.,வைச் சேர்ந்த அ.ராசா, நம் முதல்வரின் தாயைப் பற்றி, தவறாக பேசுகிறார் என்றால், அவருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?முன்னாள், தி.மு.க., மத்திய அமைச்சரான தயாநிதி மாறன், 'அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவை, 'மம்மி' என்கின்றனர். பிரதமர் மோடியை, 'டாடி' என்கின்றனர். அப்படியானால், இந்த இரு தலைவர்களுக்கும் என்ன உறவு ?' என, இழிவாகப் பேசி இருக்கிறார்.பேசக் கூடாததை எல்லாம் பேசி நாறடித்து விட்டு, எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத நிலை வரும்போது, வேண்டா வெறுப்பாக, மன்னிப்பு கோருகின்றனர்.அவதுாறு வழக்கு என்பது, இப்போது செல்லாக் காசாகி விட்டது. அதனால், அநாகரிக பேச்சு அதிகரித்து விட்டது.ராஜாஜியைப் பார்த்து, 'நான்சென்ஸ்' என, நம் நாட்டின் முதல் பிரதமர் நேரு ஒருமுறை கடிந்துக் கொண்டார். உடனே, நேரு மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்து, ௧ லட்சம் ரூபாய் நஷ்டஈடு வாங்கினார், ராஜாஜி. காரணம், அப்போது, நீதி பரிபாலனம் மிக நேர்த்தியாக நடந்தது.இப்போது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வது எப்படி என்பது, அரசியல்வாதிகளுக்கு கைவந்தக் கலையாகி விட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, 20 ஆண்டுகளாக இழுத்து அடிக்கப்பட்டதை, நாம் அறிவோம். அவதுாறு வழக்கு எல்லாம், இப்போது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே போடப்படுகின்றன. அதில், தீர்ப்பு ஏதும் கிடைப்பதில்லை; ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து, வழக்கை புதைத்து விட முடியும்.அதனால் தான், அரசியல் வியாபாரிகள் அநாகரிகமாகப் பேசுகின்றனர். அரசியல், சாக்கடையாக மாறிப் போய் ரொம்ப நாட்களாகின்றன. அதனால் தான், அரசியல் வியாபாரிகள் பேசும் பேச்சில், துர்நாற்றம் வீசுகிறது.தரம் தாழ்த்திப் பேசும் இழிபிறவியின் உருவப் பொம்மையை எரிப்பதாலோ, செருப்பால் அடிப்பதாலோ, அவர் மனம் திருந்த போவதில்லை.இவரைப் பாராட்டி, சீராட்டி வளர்க்கும் கட்சித் தலைவருக்கு, தேர்தலில் சரியான முறையில் பாடம் கற்பிக்க வேண்டும்.நீதிமன்றங்களால் தண்டிக்க முடியாத இந்த ஜென்மங்களுக்கு, மக்கள் மன்றத்தில் தான் தண்டனை கிடைக்க வேண்டும்.


தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: ஆட்சிக்கு வரும் முன்பே, தி.மு.க.,வினரின் ஆட்டம் துவங்கிவிட்டது. பெண்களை இழிவுப்படுத்தி பேசுவது, தி.மு.க.,விற்கு புதிதல்ல. அதனால் தான், முதல்வரின் தாயை தரக்குறைவாக பேசும் அளவிற்குச் சென்றுள்ளார், தி.மு.க.,வின் துணை பொதுச்செயலர், '2ஜி ஊழல்' புகழ் ஆ.ராசா.தி.மு.க.,வைச் சேர்ந்த பேச்சாளர் லியோனி, பெண்களின் இடுப்பை கேலியாக வர்ணித்துப் பேசியுள்ளார்.நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்பதை வலியுறுத்தி, துண்டு பிரசுரம் வினியோகித்த சமூக ஆர்வலரை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர்.காவல்துறை அதிகாரியை பெயர் சொல்லி, நேருக்கு நேராகவே மிரட்டுகிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி.சில ஆண்டுகளுக்கு முன், பெண் தெய்வமான ஆண்டாளை, இழிவுபடுத்தும் விதமாக கட்டுரை எழுதி களிப்படைந்தார், தி.மு.க., விசுவாசியான, கவிஞர் வைரமுத்து.ராமரை, திருடன் என்றும்; சீதையை, விபசாரி என்றும் வசைபாடிய ஸ்டாலின் தான், இன்று, தி.மு.க., தலைவராக இருக்கிறார்.இதெல்லாம், தி.மு.க.,வின் தற்போதைய வரலாறு. அக்கட்சியின் கடந்த கால வரலாறுகளை புரட்டிப் பார்த்தால், நிறைய அசிங்கங்கள் தெரிய வரும்.முன்னாள் பிரதமர் இந்திராவின் நெற்றியில் வழிந்த ரத்தம் முதல், சட்டசபையில், எம்.எல்.ஏ., அனந்தநாயகியின் கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில் வரை, அநாகரிகத்திற்கு பெயர் பெற்றவர்கள், தி.மு.க.,வினர்.மேல் மட்டத்தில் மட்டுமல்ல, அக்கட்சியின் கடைநிலை நிர்வாகி கூட, அராஜகத்தில் தான் ஈடுபடுவர்.ஓட்டலில் மூக்கு பிடிக்கத் தின்றபின், பணம் கொடுக்காமல், ஓட்டல் உரிமையாளரையே அடித்து உதைப்பர். 'பியூட்டி பார்லர்' பெண் ஊழியரை, சகட்டுமேனிக்கு தாக்குவர்.அநாகரிகமாக பேசுவதும், எழுதுவதும், அராஜகச் செயலில் ஈடுபடுவதும், தி.மு.க.,வினருக்கு கை வந்த கலை என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்பதெல்லாம், ஏட்டுச் சுரக்காய்.இப்படிப்பட்ட கட்சியினர், ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியே!


ஈ.வெ.ரா., கூறியது உண்மை!பேராசிரியர் சு.அர்த்தநாரி, இதய நோய் ஊடுருவல் நிபுணர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, 1949ல் தி.க.,வில் இருந்து பிரிந்து, தி.மு.க., உருவான போது, தங்களை வளர்த்த, ஈ.வெ.ரா.,வை பற்றியே இழிவாக பேசினர்.ஈ.வெ.ரா., பேசிய, தி.க., பொதுக்கூட்டத்தில், தி.மு.க.,வினர் கற்கள், செருப்பு களை வீசி எறிந்தனர். இதற்கு ஈ.வெ.ரா., 'இதை எறிந்தவன், தன் தந்தைக்கு பிறந்திருந்தால், மேடைக்கு வரட்டும்...' எனக் கூறினார். மேலும், அந்த கல்லை ஏலம் விட்டு, கிடைத்த பணத்தை, கட்சி நிதிக்கு சேர்த்தார். அண்ணாதுரை பேச்சு, எழுத்துக்களில், 'கம்பரசம், மாற்றான் தோட்டத்து மல்லிகை, ரோமாபுரத்து ராணிகள்' என்றார்.'நடிகைக்கும், உங்களுக்கும் உறவு இருக்கிறதா?' என்ற நிருபரின் கேள்விக்கு, அண்ணாதுரை, 'அந்த நடிகை படிதாண்டா பத்தினியுமல்ல; நானும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல' என்றார்.கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க.,வினர், அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசின் தலைவர்களைப் பற்றி பேசிய பேச்சு, ஆபாசத்தின் உச்சம்.பெருந்தலைவர் காமராஜை, 'கருப்பு பெட்டழகன், மாட்டுத்தோல்' என்றெல்லாம் இழிவுப்படுத்தினர். 'மூத்திர சட்டி' என்று, ஈ.வெ.ரா.,வை நக்கல் செய்தனர்.இன்னும் தமிழகத்து பெரியோரை எல்லாம், தி.மு.க.,வினர் எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ, அதன் எல்லை மீறியும் சென்றனர்.இன்றைய அரசியல்வாதிகள் சிலர், நாகரிகத்திற்கும், கலாசாரத்திற்கும் அப்பாற்பட்ட மனிதப் பிறவிகளாக இருக்கின்றனர்.'2 ஜி ஊழல்' புகழ், ஆ.ராசா, முதல்வர் இ.பி.எஸ்.,சின் தாய் குறித்து பேசியதெல்லாம், கேவலம்.தி.மு.க., பேச்சாளர் லியோனி, பெண்களின் இடுப்பை பற்றி கேவலமாக பேசுகிறார். தயாநிதி மாறனின், 'டாடி, மம்மி இருவரும் எங்கே?' என்ற பேச்சு, தி.மு.க., மாறவே இல்லை என்பதற்கு சாட்சி.தி.மு.க., ஆரம்பித்த போது, 'ஊரில் இருக்கிற வேலை வெட்டி இல்லாதவர், பொய்யர், திருடர், கொள்ளையர், பெண் பித்தர் உள்ளிட்டோருக்கு தகுந்த இடம் கிடைத்து விட்டது' என, ஈ.வெ.ரா., கூறியது நினைவுக்கு வருகிறது. அது எவ்வளவு உண்மை.'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதை உணர்வீரா, ஊழல் அரசியல்வாதிகளே!


பாடம் புகட்டுவரா பெண்கள்?


எஸ்.பாலசுப்பிரமணியன், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: தி.மு.க.,வைச் சேர்ந்த ஆ.ராசா, முதல்வர் இ.பி.எஸ்.,சின் தாய் பற்றி ஆபாசமாக பேசியது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., பேச்சாளர் லியோனி, பெண்களின் இடுப்பு குறித்து அநாகரிகமாக விமர்சித்துள்ளார். தி.மு.க., கூட்டணியில் உள்ள, வி.சி., தலைவர், ஹிந்து பெண்களை மிக தவறாக பேசுகிறார். இவர்கள் அனைவரும், பெண்களை இழிவுபடுத்துகின்றனர். 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' என, பாரதியார் முழங்கியிருக்கிறார்.தி.மு.க.,வினரின் அநாகரிக பேச்சைக் கேட்டால், பெண்கள் யாரும், அக்கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள். ஆ.ராசாவின் அநாகரிகப் பேச்சுக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் யாரும், சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.கனிமொழி மட்டும், ஏதோ சம்பிரதாயத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இதே கனிமொழி தான், வி.சி., தலைவர் திருமாவளவன், ஹிந்து பெண்களை கேவலப்படுத்தியபோது, கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பதையும், நினைவில் கொள்ள வேண்டும். அவசரநிலை காலத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா, 20 அம்ச திட்டத்தை அமல்படுத்தியபோது, முதல்வராக இருந்த கருணாநிதி, 'எங்களிடம், 21வது அம்சமாக, விதவை மறுவாழ்வுத் திட்டம் இருக்கிறது. வேண்டுமானால், இந்திரா அதற்கு விண்ணப்பிக்கலாம்' என்றார்.தி.மு.க., அப்போதிலிருந்து, இன்று வரை, பெண்களை இழிவுபடுத்துவதை தொடர்ந்து வருகிறது.அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக பேசினர் என்பதை, அனைத்து பெண்களுக்கும் தெரிய வேண்டும். அதற்கான முயற்சியில், ஆளுங்கட்சி ஈடுபட வேண்டும்.பெண்களின் எதிர்ப்பு ஓட்டு, தி.மு.க.,விற்கு பாடம் புகட்டட்டும்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
04-ஏப்-202107:27:48 IST Report Abuse
Darmavan கீழ்மைத்தனமான பேச்சு பிறவிக்குணம் வளர்ந்த விதம். இதையெல்லாம் ஆதரித்து ஒட்டு போடுபவன் எவ்வளவு கேவலமானவனாயிருப்பான்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-ஏப்-202106:06:49 IST Report Abuse
NicoleThomson ஓரு விஷயம் புரிகிறது திமுகவினர் பெண்களை இன்னமும் போக பொருளாகத்தான் பார்க்கின்றனர் , ஆணாதிக்கம் நிறைந்த மக்களால் தான் இப்படி இருக்க முடியும் , தப்பெல்லாம் இவர்கள் மீது வைத்து கொண்டு வீட்டு பெண்களை இழுத்து வசை பாடும் இவர்களுக்கு தமிழக பெண்கள் புத்தி புகட்டுவார்களா?
Rate this:
Cancel
04-ஏப்-202102:38:30 IST Report Abuse
மோகனசுந்தரம் நம் சுடலைக்கு பூனைமேல் மதில், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே, டிசம்பர் 25 சுதந்திரதினம் etc etc கூட ipak நிறுவனம் சொல்லி கொடுத்ததா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X