பொது செய்தி

இந்தியா

ராஜமலைக்கு பயணிகள் செல்ல ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறு அருகே ராஜமலைக்குச் செல்லும் பயணிகளுக்கு ஆன் லைன்' முன்பதிவை கட்டாயமாக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகளை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். அதற்கு மூணாறு--உடுமலைபேட்டை ரோட்டில் உள்ள ஐந்தாம் மைலில் நுழைவு சீட்டு பெற்று

மூணாறு : கேரளா மூணாறு அருகே ராஜமலைக்குச் செல்லும் பயணிகளுக்கு ஆன் லைன்' முன்பதிவை கட்டாயமாக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகளை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். அதற்கு மூணாறு--உடுமலைபேட்டை ரோட்டில் உள்ள ஐந்தாம் மைலில் நுழைவு சீட்டு பெற்று வனத்துறையினருக்குச் சொந்தமான வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்றனர். கொரோனாவுக்கு பிறகு ராஜமலைக்கு செல்ல ஆன் லைன்' மூலம் முன்பதிவு நடக்கிறது. தற்போது 25 சதவீதம் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆன் லைன்' முன்பதிவை படிப்படியாக முழுமையாக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதற்கு ஐந்தாம் மைலில் வசதி செய்யப்படுகிறது.ராஜமலைக்கு ஒரே நாளில் 6 ஆயிரம் பயணிகள் வரை சென்று வந்தனர். தற்போது நாள் ஒன்றுக்கு 2880 பேரை மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.ஆன் லைன்' முன்பதிவால் பயணிகளின் நேரம் மிச்சப்படுவதுடன் ஐந்தாம்மைலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என நம்புகின்றனர். அதனை முழுமையாக செயல்படுத்திய பிறகு ஐந்தாம் மைல் மற்றும் மூணாறில் வன பாதுகாவலர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள டிக்கெட் கவுன்டர்கள் மூடப்படும்.ராஜமலைக்கு செல்லும் பயணிகள்www.eravikulamnationalpark.inஎன்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X