திருநெல்வேலி : 'ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் பூங்கோதைக்கு ஓட்டு போடாதீர்கள்' என, அவரது தாய் கமலா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை. ஆலங்குளம்முன்னாள் அமைச்சரான இவர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மீண்டும், இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.குடும்பசொத்துகளை பிரித்து கொள்வதில், சகோதரர் எழில்வாணன் உள்ளிட்டோர், இவருக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பூங்கோதை, வேட்புமனு தாக்கலின் போது, தந்தை ஆலடி அருணா கல்லறைக்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு அவர் வரக்கூடாது என போர்டு எழுதி வைத்திருந்தனர்.தற்போது, ஓட்டுப்பதிவு நெருங்கும் வேளையில், அவரது தாய் கமலா பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அவரது பேச்சு விபரம்:என் மகள், என் பேச்சை கேட்பதில்லை. சிறுவயதில் இருந்தே திமிர் பிடித்தவள். என்னை அடித்து துன்புறுத்துவாள்.'வெண்குஷ்டகாரி' என, என் நோய் குறித்து பேசுவாள். இப்போதும் அவள் தோற்று விட்டால், என்னை வீடு புகுந்து தாக்குவாள்.என் கணவர் ஆலடி அருணா, லஞ்சம் வாங்க மாட்டார். ஆனால், என் மகள் பூங்கோதை லஞ்சம் வாங்கி, திருவண்ணாமலை, மாமல்லபுரம் என பல இடங்களில், 'ரிசார்ட்' கட்டியுள்ளார்.பேராசைஅனைத்தும் லஞ்சம் வாங்கி சேர்த்த பணம்.எனக்கு சொந்தமான பள்ளியை ஏமாற்றி, அவளது கணவர் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டாள். சொத்து சேர்க்க வேண்டும் என பேராசை பிடித்தவள்.அவள் வெற்றி பெற்றால், ஆலங்குளத்தையே விற்று விடுவாள். அவளுக்கு ஓட்டுப் போடாதீர்கள். நல்லவரை தேர்ந்தெடுங்கள்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE