பொதுக்கூட்ட துளிகள்* தி.மு.க.,விற்கு(டி.எம்.கே.,) விளக்கம் அளித்து ஜே.பி., நட்டா பேசுகையில், 'டி' என்றால் டைனஸ்டி (-வாரிசு அரசியல்), 'எம்' என்றால் மனி (பணம்), 'கே' 'கட்டப்பஞ்சாயத்து-' என்றார்.*
மேடையில் ஜே.பி.,நட்டாவுக்கு வெள்ளி வேல், வீரவாள், துர்க்கை படம் ஆகியவற்றை நிர்வாகிகள் வழங்கினர்.* மேடைக்கு வந்தவுடன் 'வீர வீர வீரவேல், வெற்றி வெற்றி வெற்றிவேல்' எனக்கூறி நட்டா பேச்சை துவக்கினார்.* - நட்டாவுடன் தரைவழி போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.,சிங் பங்கேற்றார்.- -* முன்னதாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நட்டாவை வேட்பாளர் எச்.ராஜா., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.- * பா.ஜ., தொண்டர்கள் நட்டாவுக்கு தலைப்பாகை அணிந்து வரவேற்று இருசக்கர வாகனத்தில் மேடைக்கு அழைத்து வந்தனர்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE