பொது செய்தி

தமிழ்நாடு

அந்தமானில் புயல்: பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : அந்தமான் கடலில் உருவான புயல் சின்னத்தால் பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் மத்திய கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறி உள்ளது. இப்புயல் அந்தமான் போர்ட் பிளேயரில் இருந்து வடகிழக்கில் 400 கி. மீ., தூரத்திலும், தாய்லாந்து புக்கட்டில் இருந்து வடமேற்கில் 420 கி.மீ., தூரத்திலும், மியான்மர்

ராமேஸ்வரம் : அந்தமான் கடலில் உருவான புயல் சின்னத்தால் பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமான் மத்திய கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறி உள்ளது. இப்புயல் அந்தமான் போர்ட் பிளேயரில் இருந்து வடகிழக்கில் 400 கி. மீ., தூரத்திலும், தாய்லாந்து புக்கட்டில் இருந்து வடமேற்கில் 420 கி.மீ., தூரத்திலும், மியான்மர் யங்கூனில் இருந்து தெற்கில் 640 கி.மீ., தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதனால் தொலைதூர புயல் எச்சரிக்கையாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் நேற்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடித்து கரை திரும்ப வேண்டும் என மீன்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X