பொது செய்தி

தமிழ்நாடு

உ.பி., போலீஸ் அதிகாரிக்கு கொரோனா சொந்த காரில் ஏற்றி சென்ற கலெக்டர்

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸ் பார்வையாளரான, உ.பி.,யை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, கார் டிரைவர்கள் தயங்கிய நிலையில், கலெக்டர் தன் காரில் ஏற்றி சென்றார். மதுரையில், தேர்தலின் போது, போலீஸ் பணிகளை கண்காணிக்க, உ.பி.,யை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி தரம்வீர் யாதவ், பத்து நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். மதுரை அரசு சுற்றுலா

மதுரை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸ் பார்வையாளரான, உ.பி.,யை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, கார் டிரைவர்கள் தயங்கிய நிலையில், கலெக்டர் தன் காரில் ஏற்றி சென்றார்.

மதுரையில், தேர்தலின் போது, போலீஸ் பணிகளை கண்காணிக்க, உ.பி.,யை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி தரம்வீர் யாதவ், பத்து நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். மதுரை அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள அவர், சில நாட்களாக காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுற்றார். கொரோனா அறிகுறிகளும் தென்பட்டன. இதனால் அவரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, கார் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் தயங்கினர். இந்த தகவல், கலெக்டர் அன்பழகனுக்கு சென்றது. அவர், கொரோனா கவச உடை அணிந்து, அரசு காரை தவிர்த்து, தன் சொந்த காரில் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

போலீஸ் அதிகாரியை, காரில் அழைத்து சென்று, அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். 'டீன்' சங்குமணி மேற்பார்வையில் டாக்டர்கள் குழு, அவரை பரிசோதித்தனர். இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.'டீன்' சங்குமணி கூறுகையில், ''தரம்வீர் சிங்கிற்கு கொரோனா உறுதியானாலும், தீவிர பாதிப்பு இல்லை. சி.டி., 'ஸ்கேன்' பரிசோதனையில், அவரது நுரையீரலில் எவ்வித தாக்கமும் இல்லை. லேசான அறிகுறி மட்டுமே உள்ளது. விரைவில் குணமடைவார். தொடர்ந்து கண்காணிக்கிறோம்,'' என்றார்.கலெக்டர், தன் சொந்த காரில், கொரோனா பாதித்த அதிகாரியை அழைத்து சென்றது, பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
04-ஏப்-202102:46:52 IST Report Abuse
Baskar சில நல்ல உள்ளங்களும் உள்ளன என்பதை நமது கலெக்டர் நிரூபித்து விட்டார். சில பேர்கள் மனிதபந்தத்தோடு வேலை செய்பவர்கள்.சிலர் மணியோடு(பணம்) கொடுத்தால் வேலை செய்பவர்கள். பாருங்கள் ஒரு பியுனோ ஒரு அரசு அலுவலர்களோ பயந்த இடத்தில் நமது கலெக்டர் செய்த வேலையை.இது தான் மனித பண்பாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X