பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுக்கு பிறந்த நாள் கொண்டாடிய

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கோவையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், நகரத்து சாலைகளில் இருந்த மரங்கள் எல்லாம் வெட்டி சாய்க்கப்பட்டு விட்டன. மரக்கன்று நடும் விழாக்கள் மட்டும் நடக்கின்றன. ஆனால், நட்ட மரக்கன்றுகள் வளர்ந்து இருப்பதாக தெரியவில்லை. காக்கா, குருவி உட்கார கூட வீதிகளில் மரங்கள் இல்லை.காந்திபுரம் வீதிகளில் முன்பு ஏராளமான மரங்கள் இருந்தன. இப்போது இல்லை. காந்திபுரம் ஒன்பதாவது வீதியில்,

கோவையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், நகரத்து சாலைகளில் இருந்த மரங்கள் எல்லாம் வெட்டி சாய்க்கப்பட்டு விட்டன. மரக்கன்று நடும் விழாக்கள் மட்டும் நடக்கின்றன. ஆனால், நட்ட மரக்கன்றுகள் வளர்ந்து இருப்பதாக தெரியவில்லை. காக்கா, குருவி உட்கார கூட வீதிகளில் மரங்கள் இல்லை.காந்திபுரம் வீதிகளில் முன்பு ஏராளமான மரங்கள் இருந்தன. இப்போது இல்லை. காந்திபுரம் ஒன்பதாவது வீதியில், 'காரி பிக்பாஸ்' என்ற டெய்லர், தனது கடைக்கு அருகில் ஒரு மரத்தை நட்டு வளர்த்து, அந்த மரத்துக்கு கேக் வெட்டி முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.அவரிடம் பேசினோம்...!நான் காந்திபுரம் பகுதியில், 30 வருஷமாக டெய்லர் கடை வைத்து இருக்கிறேன். அப்போது, வீதிக்கு வீதி நிறைய மரங்கள் இருந்தன. இன்றைக்கு ஒன்று கூட இல்லை. போன வருஷம் மார்ச், 20ம் தேதி, என் கடைக்கு முன் இந்த மரக்கன்றை நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி வந்தேன். அது இன்றைக்கு தளதளவென்று தலைக்கு மேல் வளர்ந்து, பெரிதாகி இருக்கிறது.என் செல்ல கன்றுக்கு, 'நிழல் வேந்தன்'என பெயர் வைத்து, அதன் முதல் பிறந்த நாளை கேக் வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினேன். ஒவ்வொருவரும் மரத்தை மகன், மகள் போல் நேசிக்க வேண்டும். மரம் வளர்க்காவிட்டாலும் வெட்டாதீர்கள் என்கிறார், இந்த 'பச்சை' மனிதர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X