பொது செய்தி

தமிழ்நாடு

'21 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!'

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
''கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள, 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெல்லும்,'' என, அமைச்சர் வேலுமணி கூறினார்.அ.தி.மு.க., சார்பில், தொண்டாமுத்துார் தொகுதியில் மூன்றாம் முறையாக போட்டியிடும், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, பிரசாரத்துக்கு இடையே அளித்த பேட்டி:கோவை மாவட்ட அ.தி.மு.க.,வில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நீங்கள், மற்ற மாவட்ட அரசியலிலும்

''கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள, 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெல்லும்,'' என, அமைச்சர் வேலுமணி கூறினார்.அ.தி.மு.க., சார்பில், தொண்டாமுத்துார் தொகுதியில் மூன்றாம் முறையாக போட்டியிடும், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, பிரசாரத்துக்கு இடையே அளித்த பேட்டி:கோவை மாவட்ட அ.தி.மு.க.,வில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நீங்கள், மற்ற மாவட்ட அரசியலிலும் தலையிடுகிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு பற்றி...கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள, 21 தொகுதிகளுக்கு நானே பொறுப்பாளர். கட்சியில் அமைப்பு செயலாளராக இருக்கிறேன். உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பதால், பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் வருவர். ஆதிக்கம் செலுத்தும் வார்த்தைக்கு இடமில்லை.வால்பாறை தொகுதியை த.மா.கா.,வுக்கு ஒதுக்காததற்கு நீங்களே காரணமென, கோவை தங்கம் சொல்லியிருக்காரே...தனிப்பட்ட முறையில், கோவை தங்கம் வேண்டப்பட்டவர். எந்த முடிவும் நான் எடுப்பதில்லை. முடிவெடுப்பது தலைவர்கள் தான்.வர்தான், கான்ஸ்ட்ரானிக்ஸ், கே.சி.பி., போன்றவை, உங்களது பினாமி நிறுவனங்கள் என, தி.மு.க.,வினர் குற்றம் சுமத்தி, வீடியோ பரப்பி வருகின்றனரே?இதை, தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர். டி.ஆர்.பாலு, பொன்முடி போன்றவர்கள் தொழில் செய்யவில்லையா. அதையெல்லாம் ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா. தி.மு.க., ஆட்சியில், செம்மொழி மாநாடு நடந்தபோது, இந்த கம்பெனிகள் வேலை செய்திருக்கு. இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவர்களை, குற்றம் சாட்டுவதற்காக, சொல்கிறார்கள். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டு.உங்கள் சொல்லுக்கு கட்டுப்படாத அதிகாரிகளை, பதவியில் இருந்து துாக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைத்து விடுகிறீர்களாமே?இதெல்லாம் தவறான குற்றச்சாட்டு. எதிலும் தலையிடுவதில்லை. யார் வந்தாலும் எங்களுக்கு பிரச்னையில்லை. தொடர்ந்து பணியாற்ற போகிறோம்.கோவை மண்டலத்தில், எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவீர்கள்?கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள. 21 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, முதல்வராக பழனிசாமி பதவியேற்பார்.தொண்டாமுத்துார் தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?தொண்டாமுத்துாரை முதன்மையான தொகுதியாக கொண்டு வந்திருக்கிறோம். ரூ.130 கோடியில், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்திருக்கிறோம். கோவை மாவட்டம் முழுவதும் சாலை வசதி, கூட்டு குடிநீர் திட்டம், மேம்பாலங்கள், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருகிறோம். விவசாயிகளுக்காக, அவிநாசி - அத்திக்கடவு திட்டம்-2 கொண்டு வந்து, எல்லா ஏரியையும் நிரப்புவோம். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், வேலைவாய்ப்புக்காக 'சிட்கோ' உருவாக்க இருக்கிறோம்.உங்கள் தொகுதிக்குள் மனித - விலங்குகள் மோதல் போக்கு தொடர்கிறது; 100க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளனவே!இப்பகுதியில் மட்டும் அவ்வளவு யானைகள் இறக்கவில்லை. அது, ஒட்டுமொத்த கணக்கு. மாவட்ட வன அலுவலர் தலைமையில், 'டீம்' அமைத்திருக்கிறோம். யானை வருகை தடுக்க, அகழி வெட்டுகிறோம். வறட்சியான காலத்தில் வருகின்றன; அவை வராமல் இருக் நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X