அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பல்பு முதல் பாலம் வரை ஊழல்தான்!'

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
''பல்பு முதல் பாலம் வரை ஊழல் நடந்திருக்கிறது,'' என, தொண்டாமுத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உறுதியளித்தார்.அவரளித்த பேட்டி:தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை, 'ஊழல் மணி' என்றே அழைக்கிறீர்களே. ஊழல் செய்ததற்கான ஆதாரம் இருக்கிறதா?ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருக்கிறார். பல்பு முதல் பாலம் வரை வரை, மார்க்கெட் விலையை விட, 10 முதல், 12
 'பல்பு முதல் பாலம் வரை ஊழல்தான்!'

''பல்பு முதல் பாலம் வரை ஊழல் நடந்திருக்கிறது,'' என, தொண்டாமுத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உறுதியளித்தார்.அவரளித்த பேட்டி:தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை, 'ஊழல் மணி' என்றே அழைக்கிறீர்களே. ஊழல் செய்ததற்கான ஆதாரம் இருக்கிறதா?ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருக்கிறார். பல்பு முதல் பாலம் வரை வரை, மார்க்கெட் விலையை விட, 10 முதல், 12 மடங்கு அதிகமாக விலை நிர்ணயித்து, கொள்முதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக, அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஜூன், 21ல் இறுதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது.தொண்டாமுத்துார் தொகுதிக்காக, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். விமான நிலையம் விரிவாக்கம், வெளிநாட்டு நிறுவனத்துக்கு குடிநீர் வினியோக உரிமம் ரத்து, சிறுவாணி அணை துார்வாருதல் உள்ளிட்ட வேலைகள் எம்.எல்.ஏ., அதிகாரத்துக்கு உட்பட்டது இல்லையே?கோவை மாவட்டத்துக்கு மிக முக்கியமான திட்டங்கள் என, தமிழக முதல்வரிடம் தெரிவித்து, செயல்படுத்த அழுத்தம் கொடுப்பேன்.கோவையில், அமைச்சர் வேலுமணி, ஏகப்பட்ட வளர்ச்சி பணிகள் செய்திருக்கிறாரே; அதை மீறி, உங்களுக்கு ஓட்டு விழும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?வளர்ச்சி பணி எதுவும் செய்யவில்லை. அவர் செய்தது, கொள்ளை மட்டுமே. 50 ஆண்டுகளில் ஒரு மனிதன் பெற வேண்டிய வளர்ச்சியை, வேலுமணி, 5 ஆண்டுகளில் பெற்றிருக்கிறார்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கமிஷன் இல்லாத டெண்டர் நடைமுறை இருக்கும் என்பதை, உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?டெண்டரில் கமிஷன் வாங்குவது, தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது. நான் எம்.எல்.ஏ.,வாக தேர்வானதும், டெண்டரில் கமிஷன் இருக்காது. நல்ல கான்ட்ராக்டர்கள், நன்றாக வேலை செய்வார்கள்.கோவை தி.மு.க.,வினர் மீது நம்பிக்கை இல்லாமல், உங்களை வேட்பாளராக, தலைமை களமிறக்கி உள்ளதா?நானும் கோவைக்காரரே. சொந்த ஊர், காங்கயம். தலைவர் ஸ்டாலின் சொன்னதால், தொண்டாமுத்துாரில் போட்டியிடுகிறேன். தலைவர் சொன்னால், எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம்.தேர்தல் நெருங்கும் சமயத்தில், தி.மு.க.,வினரும் ஓட்டுக்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாக, தகவல் பரவியுள்ளதே?என்னிடம் கொடுக்க பணமில்லை; அப்படி இருந்தாலும், கொடுக்க மாட்டேன்.ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என, இன்று வரை தி.மு.க.,வை தானே சொல்கிறார்கள்?ஊழல் குற்றம் சுமத்துவது வேறு; அதை நிரூபிப்பது வேறு. தமிழகத்தில் ஊழலுக்காக ஒரு முதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, யாருடைய ஆட்சியில்; எந்த கட்சியில். ஜெ., - சசிகலா மீது தானே குற்றம் கூறப்பட்டது. அவர்களுக்கு ஊழல் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த, 13 பேர் மீது ஊழல் வழக்கு பதிவாகி இருக்கிறது; 'ஸ்டே' வாங்கியிருக்கின்றனர். அதை வாபஸ் வாங்கி, வழக்கை எதிர்கொள்ள தைரியமில்லாமல் இருப்பதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம் சுமத்துகின்றனரே...பழனிசாமி முதல்வரான பின், எங்கள் மீது எவ்வளவு வழக்கு போடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள். எப்.ஐ.ஆர்., போடுங்கள்; 'சார்ஜ் ஷீட்' பதிவு பண்ணுங்கள். கோர்ட்டில் தண்டனை வாங்கிக் கொடுங்கள். அதையே செய்ய முடியாத உங்களுக்கு ஏனிந்த நியாயம்?காருண்யா நகர் என்கிற பெயரை மீண்டும் சாடிவயல் என மாற்றுவீர்களா?கிராம ஊராட்சி நிர்வாகம், கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்தால், கலெக்டருக்கு பரிந்துரைப்பேன்.இவ்வாறு. அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X