எல்லா விஷயங்களிலும், மூட நம்பிக்கைகள் சில உலா வரும். அப்படி, கோடை காலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது குறித்து பல தவறான கருத்துக்கள் இருக்கின்றன. இதை நம்பி, பயிற்சிகளில் ஈடுபட்டால்,தலைவலி, குமட்டல் என, இன்னும் பல உடல் பாதிப்புகள் அதிகரித்து, ஆரோக்கியம் கெடும்.கோடை கால உடற்பயிற்சி குறித்த தவறான கருத்துக்கள் குறித்தும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் பார்ப்போம்.அதிகம் வியர்வை எனில் சிறந்த பயிற்சிவியர்ப்பது, நல்ல உடற்பயிற்சி செய்ததற்கான அடையாளம் என பலர் நம்புகின்றனர். உடற்பயிற்சி தவிர, மரபணு, ஈரப்பதம், வெப்பம் என, ஒருவர் வியர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கோடையில் வியர்ப்பது பொதுவனது. இது, குளிர்ச்சி அடைவதற்கான உடலின் செயல். இருப்பினும், அதிகப்படியாக வியர்ப்பது என்பது நீரிழப்புக்கான அறிகுறி. ஆகவே, உடற்பயிற்சி செய்யும்போது, போதுமான நீரை அருந்துவது முக்கியம்.கோடையில் கலோரிகளை இழக்கிறோம்வெயில் காலத்தில், நம் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பது பிரபலமான கருத்து. உண்மையில், கோடையை விட குளிர் காலத்திலே, அதிக கலோரிகளை நாம் இழக்கிறோம்.குளிர்காலத்தில், வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள உடல் கடினமாக உழைக்கிறது. இதற்கு அதிக கலோரிகள் தேவைப்படும். இதனால், எந்த முயற்சியும் செய்யாமலே, நாம் அதிக கலோரிகள் இழக்கிறோம்.பானங்கள் நீரிழப்பை ஈடுகட்டும்உடற்பயிற்சிக்குபின் குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்குகளை பருகுவதன் மூலம் இழக்கப்பட்ட நீரை ஈடுகட்ட முடியும் என நினைக்கின்றனர். பானங்கள் உங்கள் நீரிழப்பை ஓரளவு ஈடுகட்டும். ஆனால், அதில் இருக்கும் அதிக கலோரிகள், சர்க்கரை உங்கள் பயிற்சியை பயனற்றதாக்கி விடும்.உடற்பயிற்சியால் ஏற்படும் நீரிழப்புக்கு தண்ணீர் மட்டுமே சரியானது. நீண்ட மற்றும் கடுமையான உடற்பயிற்சிகள் எனில், தரமான எலக்ட்ரோலைட்ஸ் பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.ஏசியில் உடற்பயிற்சிஏசியில் உடற்பயிற்சி நல்லது, தீங்கானது என இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. மூடிய அறையில், அதிக குளிர்ச்சியில் பயிற்சி மேற்கொள்வது ஆபத்தானது. ஏசி, புதிய காற்றை தடுக்காத வகையில், காற்றோட்டமுள்ள அறையில் பயிற்சி செய்ய வேண்டும். நம் நாட்டு தட்ப வெப்பத்திற்கேற்ப, மிதமான சூழலில், 24 டிகிரி வெப்பநிலைக்குள், உடற்பயிற்சி செய்வது சிறந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE