அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்கல் பாலிடிக்ஸ்: வீடு வீடாக துண்டு பிரசுரம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
அன்னுார் பேரூராட்சி பகுதியில், தர்மர் கோவில் வீதி, சர்ச் வீதி, பள்ளிவாசல் வீதி உள்ளிட்ட பகுதியில் தி.மு.க., - மா.கம்யூ., - இ.கம்யூ., - மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தும், ஒப்புதல் தெரிவிக்கும் வீடுகளில் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டியும் ஓட்டு சேகரித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாவட்ட சிறுபான்மையினர் நல

அன்னுார் பேரூராட்சி பகுதியில், தர்மர் கோவில் வீதி, சர்ச் வீதி, பள்ளிவாசல் வீதி உள்ளிட்ட பகுதியில் தி.மு.க., - மா.கம்யூ., - இ.கம்யூ., - மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தும், ஒப்புதல் தெரிவிக்கும் வீடுகளில் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டியும் ஓட்டு சேகரித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாவட்ட சிறுபான்மையினர் நல குழுவினர், ஒட்டர்பாளையம், பொன்னேகவுண்டன் புதுார், மூலக் குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், வீடு, வீடாக, பிரசாரத்தில் ஈடுபட்டனர்.தனி ஒருவனாக பிரசாரம்வடவள்ளி பகுதியை சேர்ந்த ராகுல்காந்தி,32, கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த, 2019ல் பார்லிமென்ட் தேர்தலில், கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு, 2,196 ஓட்டுகள் பெற்றார். நான்காம் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள இவர், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 'தனி ஒருவனாக' ஓட்டு சேகரித்து வருகிறார்.அவர் கூறுகையில்,''வரிச்சுமையை குறைக்க வேண்டும். தெற்கு தொகுதியில், 20 புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படும். அரசியலில் புரட்சி நடக்க வேண்டும். இளைஞர்களால் அந்த புரட்சி ஏற்படுத்த முடியும். அதற்காகவே விஜய் பாடலை ஒலிபரப்பி, பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன்,'' என்றார்.தி.மு.க., பகீரதபிரயத்தனம் மேட்டுப்பாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம், கூட்டணி கட்சியினருடன் காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் பிரசாரம் செய்தார்.அப்பகுதியில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ''தி.மு.க., அரசு அமைத்தால், பெண்களுக்கான பேறுகால விடுப்பு, 12 மாதங்களாக உயர்த்தப்படும். கர்ப்பிணிகளுக்கு, 24 ஆயிரம் ரூபாய், தாலிக்கு, 8 கிராம் தங்கம் வழங்கப்படும். கிராமப்புற பெண்கள் சிறு தொழில் துவங்க, 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்,'' என, சண்முகசுந்தரம் பேசினார்.மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், ராம்குட்டி உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.பாரதிய ஜனதாவுக்கு ஆதரவுதேசிய அளவில் செயல்படும் சிறு, குறு தொழில்களுக்கான அமைப்பான, தமிழ்நாடு லகு உத்யோக் பாரதி, கோவை தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.அந்த அமைப்பினர் கூறுகையில், 'சிறு குறு தொழில் முனைவோரின் முன்னேறத்துக்கு வானதி பங்கு முக்கியமானது. கோவை மாநகரத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு வளர்ச்சியையும், நல்ல திட்டங்களை தருவதற்கும் அவருடைய தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானது. வானதி சீனிவாசனை வெற்றி பெற வைக்க வேண்டிய, அனைத்து பணிகளையும் செய்வோம்' என்றனர்.சங்க தேசிய செயலாளர் மோகனசுந்தரம், மாநில தலைவர் விஜயராகவன், இணை பொது செயலாளர் சிவகுமார், கோவை மாவட்ட தலைவர் சுப்ரமணியம் மற்றும் பலர் பங்கேற்றனர்.'எம்.எல்.ஏ., வேலை கொடுங்க'தொண்டாமுத்துார் தொகுதியில், சுயேச்சையாக, தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான், குனியமுத்துார் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, ''மக்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. எனக்கு எம்.எல்.ஏ., வேலை கேட்டு வருகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால், கோவையில் வீடு எடுத்து மக்களுக்கு சேவை செய்வேன். ''பழத்தை கொட்டையுடன் விழுங்கும் அ.தி.மு.க., வேண்டுமா; பழம், கொட்டை, மரத்துடன் மண்ணையும் சேர்த்து விழுங்கும் தி.மு.க., வேண்டுமா அல்லது மக்களில் ஒருவனாக உங்களுக்கு சேவை செய்ய துடிக்கும் நான் வேண்டுமா என சிந்தித்து ஓட்டளியுங்கள்,'' என பேசினார்.மேலும், 'வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், இரண்டு ஆண்டுகளில், பதவியை ராஜினாமா செய்து விடுவேன்' என்றும் கூறினார்.தோட்டங்களில் பிரசாரம்அவிநாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரான, சபாநாயகர் தனபாலை ஆதரித்து, உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பொன்னே கவுண்டன் புதுார், கணேசபுரம், குன்னத்துார், பச்சாபாளையம் உள்ளிட்ட ஊர்களில், தோட்டம், தோட்டமாகச் சென்று, பிரசாரம் செய்தனர்.அப்போது, 60 ஆண்டுகளாக கனவாக இருந்த அத்திக்கடவு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம், விவசாய மின் இணைப்புக்கு காத்திருந்த அனைவருக்கும் உடனடி இணைப்பு கொடுத்த தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசி, துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.அ.தி.மு.க.,வுக்கு ஆதரவுதமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்குமார், நிருபர்களிடம் கூறுகையில், ''ஈழுவா திய்யா சமுதாய மக்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கக் கோரும், 40 ஆண்டு கால கோரிக்கையை, தமிழக முதல்வர் பழனிசாமி நிறைவேற்றியதால், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கிறோம். மாநிலம் முழுவதும் எங்கள் சமூகத்தினர், 10 லட்சம் பேர் உள்ளோம். அதில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறோம். நாங்கள், நாராயண குரு வழிநடப்பவர்கள். கோவையை மையப்படுத்தி, மணிமண்டபம் அமைக்க வேண்டும். ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்,'' என்றார்.கூட்டமைப்பு பொது செயலாளர் ராகவன், பொருளாளர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் ஜூவாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.திண்ணை பிரசாரத்தில் பா.ஜ.,மேட்டுப்பாளையம் பா.ஜ., நகர தலைவர் உமாசங்கர் தலைமையில், 62 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கமிட்டியினர், ஒவ்வொரு வீடுதோறும் சென்று, மத்திய, மாநில அரசின் திட்டங்களை விளக்கி கூறி, கலாசாரம் பண்பாட்டை இழிவுபடுத்திய, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, ஓட்டுப்போட வேண்டாம் என, திண்ணை பிரசாரம் செய்து வருகின்றனர். மாலையில், வீதிகளில் பொதுமக்களை திரட்டி, சாஸ்திர, சம்பிரதாயங்களை எடுத்துக்கூறி, தி.மு. க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என, சபதம் ஏற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X