இ ன்றைய சூழலில், கருவளையம் என்பது பெண்களுக்கு பொதுவான பிரச்னையாக மாறி விட்டது. டீன் ஏஜ் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை துாக்கமின்மை, அதிக நேரம் மொபைல் பயன்பாடு இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், பலர் முகத்தின் பொலிவை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இப்பிரச்னையில் இருந்து இருந்து விடுபட, அழகுக்கலை நிபுணர் செல்வி அளிக்கும் டிப்ஸ் இதோ...கருவளையம் உண்டாவது ஏன் ?மொபைல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அத்யாவசியம் என்பது போய் பொழுதுபோக்கு என்பதும், நமக்கு தற்போது மொபைல் தான். நீண்ட நேரம் மொபைல் போன், லேப்டாப் பார்ப்பதால், கண்களுக்கு சோர்வு ஏற்படுவதாலும், துாக்கமின்மை, மன அழுத்தம் காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. தவிர முறையற்ற உணவு பழக்க வழக்கங்களும் இதற்கு முக்கிய காரணம். இதை சரி செய்தாலே, கருவளையம் காணாமல் போகி விடும்.n முதலில் இரவு நேரத் துாக்கம் அவசியம். குறிப்பிட்ட நேரத்தில், உறங்கச் சென்று அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.n உடல் எடைக்கு ஏற்ப அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். தினமும் காய்கறி பழங்கள் நமது உணவில் இடம்பெற வேண்டும்.n கண்களுக்கு மேக்கப் போடும் பழக்கமுள்ளவர்கள் கட்டாயம் உறங்கச் செல்லும் முன், அதை நன்றாக கழுவ வேண்டியது. அவசியம் தரமற்ற மேக்கப் பொருள் பயன்படுத்துவதும் அதை முறையாக அகற்றாமல் விடுவதும் கருவளையத்துக்கு காரணமாக அமையும்.n தக்காளி சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டையும் கலந்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம், கண்களை சுற்றி தடவிவந்தால் அதன் தன்மை குறையும்.n உருளைக்கிழங்கு சாறு இதற்கு நல்ல பயன் தரும். உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போன்று கண்களைச் சுற்றி போடலாம்.* பாதாம் கொட்டைகளை சிறிது அரைத்து பாலுடன் கலந்து கண்களை சுற்றி, பேஸ்ட் போல் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.n கற்றாழை, பாலாடை, சிறிது மஞ்சள், விட்டமின்-இ க்ரீம், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு பேஸ்ட், வெள்ளரிக்காய் இவை அனைத்தும் கலந்து கண்களை சுற்றியும், முகத்திலும் தொடர்ந்து போட்டு வந்தால், கருவளையம் மட்டுமல்ல, முகத்தின் கருமையும் நீங்கும்.என்னதான் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் சரியான துாக்கம், உணவு பழக்க வழக்கமும் இருப்பது ஆரோக்கியமான கண்களுக்கு அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE