சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பெட்டி கொடுத்தவங்க 'போட்டு' கொடுத்தாங்க!

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
''ரெய்டுக்கு போன அதிகாரிகள், தலையை சொறிஞ்சுக்கிட்டே திரும்பியிருக்காங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்துக்கு சொந்தமான கல்லுாரியில, வருமான வரித் துறை அதிகாரிகள், சமீபத்தில் சோதனை நடத்தினாங்க...''அங்குள்ள இன்ஜினியரிங்
டீ கடை பெஞ்ச்

''ரெய்டுக்கு போன அதிகாரிகள், தலையை சொறிஞ்சுக்கிட்டே திரும்பியிருக்காங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்துக்கு சொந்தமான கல்லுாரியில, வருமான வரித் துறை அதிகாரிகள், சமீபத்தில் சோதனை நடத்தினாங்க...

''அங்குள்ள இன்ஜினியரிங் கல்லுாரி கட்டடத்துல, ஐந்து மணி நேரம் சோதனை நடந்தும், எதிர்பார்த்த ஏதும் கிடைக்கலையாம்... ஆனால், தமிழக அரசின், 'டாம்ப்கால்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 100 கி., கபசுர குடிநீர் டப்பாக்கள், ஒரு லட்சம் இருந்துருக்குங்க...

''கபசுர குடிநீர் டப்பாக்களை ஏன் பதுக்கி வச்சிருக்காங்கன்னு தெரியாமல், அதிகாரிகள் குழப்பத்திலேயே, இடத்தை காலி செஞ்சுருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''இதுக்கு போய் கோபப்படலாமா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''என்ன விஷயமுன்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அரூர் நகரைச் சேர்ந்த, ம.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், 23ம் தேதி, தர்மபுரிக்கு வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைஞ்சா ஓய்...

''இதெல்லாம் நியாயமான்னு கேட்கறதுக்காக, அரூரை சேர்ந்த, ம.தி.மு.க.,வினர் சிலர், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அவர் பதில் சொல்லலையாம் ஓய்...

''கடுப்பான, ம.தி.மு.க.,வினர், 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், தி.மு.க.,வை கடுமையாக, 'அர்ச்சனை' பண்ணி பேசியிருக்கா ஓய்...

''ம.தி.மு.க., இன்னும் கொஞ்ச நாள்ல, தி.மு.க.,வுல இணைய போறது... அதுக்குள்ள ஏன் சண்டை போடணும் ஓய்...'' என்றதும், நண்பர்கள் சிரித்தனர்.

''பெட்டி கொடுத்தவங்க தான், 'போட்டு' கொடுத்தாங்களாம் பா...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''என்ன சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராகவும், திருவண்ணாமலை வேட்பாளராகவும் எ.வ.வேலு இருக்காரு... அவரு வீட்டுல, சமீபத்தில் ரெய்டு நடந்துச்சு பா...

''அந்த நாலு மாவட்டங்களில் இருந்து, தி.மு.க.,வைச் சேர்ந்த பலர், 'சீட்'டுக்காக, வேலுவிடம் சிபாரிசுக்காக போயிருக்காங்க... அப்படி போனவங்ககிட்ட எ.வ.வேலு தரப்பு, தங்களுக்கு ஒண்ணு; கட்சி மேலிடத்துக்கு ஒண்ணுன்னு, ரெண்டு பெட்டி வாங்கியிருக்காங்க பா...

''ஆனால், பெரும்பாலான, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., க்களுக்கு தான், கட்சியில மீண்டும் சீட் கொடுத்துருக்காங்க... பெட்டி கொடுத்தும், சீட் கிடைக்காதவங்க, அதை திருப்பி கேட்டுருக்காங்க பா...
''முதலை வாய்க்குள்ள போனது, திரும்ப வருமா... யாருக்கும் பெட்டியை திருப்பி கொடுக்கலையாம்... இவங்க தான், 'போட்டு'க் கொடுத்தாங்கன்னு பேசிக்கிறாங்க பா...

''இதுல, தி.மு.க.,வின் உயர் மட்டத்துல இருக்குறவருக்கும் சம்பந்தம் இருக்காம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

அப்போது அவ்வழியே சென்றவரிடம், ''என்ன துரை, முருகனுக்கு மாலை போட்டுருக்கீங்களா பா...'' என விசாரித்தார், அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


அ.தி.மு.க., ஒத்துழைப்பின்றி தடுமாறும் பா.ம.க.,



''இன்னையோட பிரசாரம் முடியுதுவே... இனிமே, காதுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்...'' என்றவாறே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''ஆமாங்க... அதே நேரம், வெளியூர்காரங்க வந்துட்டதால, உள்ளூர்காரங்க புழுங்கிட்டு இருக்காங்க...'' என, விஷயத்திற்கு வந்தார், அந்தோணிசாமி.

''எந்த தொகுதி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சென்னை, அண்ணாநகர் தொகுதியில, அ.தி.மு.க., சார்புல, 'மாஜி' அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிடுறாங்க... இவங்க, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவங்க... அங்க இருந்து, நிறைய பேரை தேர்தல் பணிக்கு அழைச்சிட்டு வந்திருக்காங்க...

''அண்ணாநகர் பகுதி கட்சியினருக்கு முக்கியத்துவம் தர மாட்டேங்கிறாங்க... இதனால, அங்க தேர்தல் பணிகள்ல தொய்வு ஏற்பட்டிருக்குது... 'ரெண்டு தரப்பினரையும் ஒருங்கிணைச்சு பணியாற்ற விட்டா, அவங்க வெற்றியை தடுக்க முடியாது'ன்னு, உள்ளூர் கட்சியினர் பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''இதே மாதிரி, சேலம், வீரபாண்டி தொகுதி நிலவரத்தையும் கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''வீரபாண்டியில, அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடுதாவ... 'அ.தி.மு.க.,வுல 'சீட்' கிடைக்காத, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட மாட்டாவ... அதோட, அ.ம.மு.க., வேட்பாளர், ஏற்கனவே அ.தி.மு.க.,வில் இருந்தவர்... அதனால, அ.தி.மு.க., ஓட்டுகளை பிரிச்சிடுவாரு...

நாம 'ஈசி'யா ஜெயிச்சிரலாம்'னு, தி.மு.க., தரப்பு மனப்பால் குடிச்சிட்டு இருக்கு வே...

''ஆனா, 'தி.மு.க.,வுலயும், தங்களுக்கு சீட் கிடைக்காத விரக்தியில, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன்கள் இருக்காவ... அ.ம.மு.க., வேட்பாளர், அந்த குடும்பத்தின் உறவினரும் கூட... இதனால, 'மாஜி' அமைச்சரின் ஆதரவாளர் ஓட்டுகள், அ.ம.மு.க., வேட்பாளருக்கு விழுந்து, தி.மு.க.,வுக்கு வெற்றி எட்டாக்கனியாகிடும்'னு சீனியர்கள் கவலைப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''என்கிட்டயும் ஒரு தொகுதி நிலவரம் இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''சீக்கிரமா எடுத்து விடும்...'' என்றார், அண்ணாச்சி.

''ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்துல, சோளிங்கர், ஆற்காடு, திருப்பத்துார் தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணியில, பா.ம.க.,வுக்கு ஒதுக்கியிருக்காங்க பா...

''இந்த மூணு தொகுதிகள்லயும், அ.தி.மு.க.,வினர் பலர் சீட் கேட்டு, கிடைக்காத விரக்தியில இருக்காங்க... இதனால, அவங்க தரப்பினர், பா.ம.க., வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராம, முறுக்கிட்டு நிற்கிறாங்க பா...

''பா.ம.க., வேட்பாளர்களும், வன்னியர் ஓட்டுகளை மட்டும் குறி வச்சு, தனியா பிரசாரத்துல ஈடுபட்டுட்டு இருக்காங்க... 'இதனால, மற்ற சமுதாயத்தினர் ஓட்டுகள் விழாம போறதோட, இந்த மூணு தொகுதிகள்ல இருக்கிற அ.தி.மு.க., அதிருப்தியாளர் ஓட்டுகள், தி.மு.க., கூட்டணிக்கும், அ.ம.மு.க.,வுக்கும் விழுந்துடும்'னு, மேலிடத்துக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பியிருக்குது... இதனால, பா.ம.க., வேட்பாளர்கள் கலக்கத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
04-ஏப்-202118:08:48 IST Report Abuse
Anantharaman Srinivasan டாம்ப்கால்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 100 கி., கபசுர குடிநீர் டப்பாக்கள், ஒரு லட்சம் இருந்துருக்குங்க...'' 500 ரூபாய் நோட்டை உள்ளே வைக்க முடியுமா முடியாதா என்ற சந்தேகம் வராதது ஏன்?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஏப்-202106:46:53 IST Report Abuse
D.Ambujavalli குடிநீர் டப்பா கலோரிக்கு படித்து, பட்டம் வாங்கவா வந்திருக்கும்? அதிலிருந்து நாலைந்து எடுத்து random செக் செய்யக்கூட ரெய்ட் வந்த அதிபுத்திசாலிகளுக்குத் தோன்றவில்லையா ?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஏப்-202106:39:03 IST Report Abuse
D.Ambujavalli இப்படி பெரிய கெத்தா சீட் வாங்கித்தர ‘பெட்டி ‘ வாங்கிவிட்டு, ஏப்பம் விடும் ஆட்களே போதும், கட்சிக்கு குழி பறித்து, கல்லும் நடுவதற்கு லட்சம் டப்பாக்கள் மக்களுக்கு கிடைக்காமல் எத்தனை பேர் கொரானாவுக்கு பலியானார்களோ ? ரெய்டில் இதற்கும் ரிப்போர்ட் செய்வார்களா? டப்பாவில் ஒன்றிரண்டை உடைத்துப் பார்த்திருந்தால் கூட ஏதாவது கிடைத்திருக்கும் அமுக்குவதில் அசகாய சூரர்களாயிற்றே கல்லூரிக்கு கப்பாசுர டப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X