பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை பாதுகாப்பு படையினர் கோவையில் கொடி அணிவகுப்பு

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கோவை:தமிழகத்தில், நாளை மறுநாள் (6ம் தேதி) சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடவள்ளி போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் சார்பில், கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. வடவள்ளி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துவங்கிய அணிவகுப்பு, மருதமலை ரோடு, ராமலிங்க கவுண்டர் வீதி, தொண்டாமுத்துார் ரோடு வழியாக, மீண்டும் வடவள்ளி
 எல்லை பாதுகாப்பு படையினர்  கோவையில் கொடி அணிவகுப்பு

கோவை:தமிழகத்தில், நாளை மறுநாள் (6ம் தேதி) சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடவள்ளி போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் சார்பில், கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.

வடவள்ளி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துவங்கிய அணிவகுப்பு, மருதமலை ரோடு, ராமலிங்க கவுண்டர் வீதி, தொண்டாமுத்துார் ரோடு வழியாக, மீண்டும் வடவள்ளி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறைவடைந்தது.பேரூர் டி.எஸ்.பி., சீனிவாசலு, எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் சம்பத்லால், பயிற்சி ஐ.பி.எஸ்., அதிகாரி ஜஷ்ரூப் கவுர்பத், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல், சூலுார் தொகுதியிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.

பாப்பம்பட்டி பிரிவு தனியார் திருமண மண்டபத்தில் துவங்கிய ஊர்வலத்துக்கு, கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., சூரூயமூர்த்தி தலைமை வகித்தார்.எல்லை பாதுகாப்பு படை உதவி கமிஷனர் மணீஷ் சின்ஹா, சூலுார் இன்ஸ்பெக்டர் முருகேசன், வீரர்கள், போலீசார் பங்கேற்றனர். பாப்பம்பட்டி பிரிவு, பாரதிபுரம், பள்ளபாளையம் பகுதி வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் மண்டபம் வந்தடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X