இயந்திரங்களுக்கு சீல் வைப்பதை உறுதி செய்யுங்க! நுண் பார்வையாளர்களுக்கு அறிவுரை| Dinamalar

தமிழ்நாடு

இயந்திரங்களுக்கு 'சீல்' வைப்பதை உறுதி செய்யுங்க! நுண் பார்வையாளர்களுக்கு அறிவுரை

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021
Share
கோவை:'ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டு இயந்திரங்களை முறையாக, 'சுவிட்ச் ஆப்' செய்து 'சீல்' வைக்கப்படுவதை நுண் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.சட்டசபை தேர்தல் ஏற்பாடு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 4,427 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதில், 861
இயந்திரங்களுக்கு 'சீல்' வைப்பதை உறுதி செய்யுங்க! நுண் பார்வையாளர்களுக்கு அறிவுரை

கோவை:'ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டு இயந்திரங்களை முறையாக, 'சுவிட்ச் ஆப்' செய்து 'சீல்' வைக்கப்படுவதை நுண் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.சட்டசபை தேர்தல் ஏற்பாடு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 4,427 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

இதில், 861 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் மிகுந்தவை என கண்டறியப்பட்டுள்ளன.அவற்றில் பணியமர்த்தப்பட உள்ள, 318 நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் நேற்று நடந்தது. அவர்களிடம் கலெக்டர் நாகராஜன் பேசுகையில், ''தேர்தல் முறையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, நுண் பார்வையாளர்கள் வசம் இருக்கிறது. அப்பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.

வாக்காளர்கள், முறையான ஆவணங்கள் கொண்டு வந்தால் மட்டுமே ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு விவரம் உள்ளிட்டவை குறித்து, பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டு இயந்திரங்களை முறையாக 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்ட, உரிய முறையில் 'சீல்' வைக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து, அந்த விவரத்தை தேர்தல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதேபோல், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், முதல்நிலை ஓட்டுச்சாவடி அலுவலர் ஆகியோருக்கான மறுபயிற்சி முகாம், ஒன்பது மையங்களில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சிங்காநல்லுார், கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளுக்கான மையங்களில் நடந்த பயிற்சி வகுப்பை, கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கு, தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X