சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அனைவருக்கும் முதல்வர் பதவி!'

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர், தாராபுரம் கொண்டரசம்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசினார். நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரன் பேசுகையில், 'கருணாநிதிக்கு, 96 வயதான போதும், தான் வகித்த முதல்வர் பதவியை, ஸ்டாலினுக்கு வழங்கவில்லை.முதல்வர் பதவியில் சில நாட்கள்
பக்கவாத்தியம்

திருப்பூர், தாராபுரம் கொண்டரசம்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசினார்.

நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரன் பேசுகையில், 'கருணாநிதிக்கு, 96 வயதான போதும், தான் வகித்த முதல்வர் பதவியை, ஸ்டாலினுக்கு வழங்கவில்லை.முதல்வர் பதவியில் சில நாட்கள் இருந்திருந்தால், துண்டு சீட்டு இல்லாமல், பேசவாவது பழகியிருப்பார். தன் மகனுக்கு, முதல்வராகும் தகுதி இல்லையென்று, கருணாநிதிக்கு தெரியும்...' என்றார்.

அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'என்ன செய்யிறது... அ.தி.மு.க.,வில் தான், அனைவருக்கும் முதல்வர் பதவி அனுபவம் கிடைக்குது...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


தி.மு.க.,வில் குவிந்திருக்கும், 'பூஸ்ட்!'



திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், ம.தி.மு.க., வேட்பாளராக முத்துரத்தினம் போட்டியிடுகிறார். பொங்கலுாரில் நடந்த, ம.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தி.மு.க., பொங்கலுார் மேற்கு ஒன்றிய செயலர் அசோகன், 'காலை எழுந்தவுடன் தினமும், 100 பேராவது வருகின்றனர்... தொண்டர்களுக்கு செலவு செய்ய, 'பூஸ்ட்' கொடுங்கள்...' என, கோரிக்கை வைத்தார்.

ம.தி.மு.க., - எம்.பி., கணேசமூர்த்தி கூறுகையில், 'இங்கு நிற்பது உதயசூரியன். நாங்கள் எங்கும், 'பூஸ்ட்' வாங்குவதில்லை... 'பூஸ்ட், போன்விட்டா, காபி' எதுவாக இருந்தாலும், தி.மு.க.,வினர் கொடுக்கலாம். உங்களிடம் தான், பூஸ்ட் அதிகமாக உள்ளது' என்றார்.

அங்கிருந்த, தி.மு.க., தொண்டர் ஒருவர், '10 ஆண்டுக்கு முன்னாடி, 'ஆட்டைய' போட்ட பணம், இன்னும் கொட்டிக் கிடக்குதுன்னு, கூட்டணிக் கட்சி தலைவர்களே சொல்லுறாங்க... நமக்கு, சில சொட்டு கூட கிடைக்க மாட்டேங்குதே...' எனக் கூறவும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


பன்னீர்செல்வம் ஏன் ஆஜராகவில்லை?

சென்னை தாம்பரம் தொகுதியின், அ.தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சின்னையா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., சமீபத்தில் பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொய்யாக பேசி பிரசாரம் செய்து வருகிறார். உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது, அவர் அமரலாம். இதை மனதில் வைத்து, அவர் செயல்பட வேண்டும்...' என்றார்.

டீக்கடையில் இருந்த முதியவர் ஒருவர், 'அ.தி.மு.க., தலைவர்கள் உண்மையைத் தான் பேசுவர் என்றால், ஜெ., எப்படி செத்தாங்கன்னு விசாரிக்கிற கமிஷன்ல, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஏன் ஆஜராக மாட்டேங்கிறார்... உண்மையை சொல்லிடுவோமுன்னு பயப்படுறாரோ...' என்றதும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஏப்-202106:26:15 IST Report Abuse
D.Ambujavalli ஆறுமுகசாமி நிம்மதியாக நாலு வருஷம் சம்பளம் சலுகை வாங்கட்டுமே என்ற பெரிய மனதுடன் கமிஷன் அமைத்து, அவருக்கு நீட்டிப்புக் கொடுத்து வளர்க்கிறதற்காக அவர் பன்னீர் செல்வத்துக்கு காலமெல்லாம் நன்றி சொல்வார். கடைசியில் ‘அம்மாவா, அப்படி யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. கேஸ் முடிந்தது’ என்று முடித்துவிடுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X